28.9 C
Chennai
Monday, May 20, 2024
ioutyytyty
ஆரோக்கிய உணவு

கருப்பட்டியின் மகத்தான பயன் பருவமடைந்த பெண்களுக்கு முக்கியமான இடம் பிடித்த ஒன்று…

இன்று இந்த கருப்பட்டியை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. ஆனால் இதில் அடங்கியுள்ள எண்ணற்ற பலன்களைப் பற்றி அறிந்து கொண்டால் நாம் நிச்சயம் இதனை மீண்டும் பயன்படுத்த துவங்குவோம்.

ஓமத்தை, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், வாயுத் தொல்லை நீங்கும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

கரும்பு சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைப் பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும்.

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால், இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.

சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும். அந்தத் தாய்ப்பாலைக் குடிக்கும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப் பெறும்.

ioutyytytyகாபியில் சர்ச்சரைக்கு பதில் கருப்பட்டியை சேர்த்து குடித்தால், நமது உடலுக்கு சுண்ணாம்புச் சத்தும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக கிடைக்கிறது. மேலும் இதனை சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம்.

கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேலும் மேனி பளபளப்பு பெறும். கருப்பட்டியில் சுண்ணாம்பைக் கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும். சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.

நீரிழிவு நோயாளிகள் கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுபாட்டில் இருப்பதுடன் அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நமது உடலுக்கு தேவையான கால்சியம் இதில் கிடைக்கிறது.

Related posts

எச்சரிக்கை கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிப்பதை உடனே நிறுத்துங்கள்

nathan

இதோ உங்களுக்காக..!! பழைய சாதத்தை வீணாக்காமல்.. இரண்டே நிமிடத்தில் பஞ்சு போன்ற இட்லியை செய்யலாம்.. எப்படி தெரியுமா?

nathan

ருசியான பருப்பு போளி செய்ய…!

nathan

ஆச்சரியப்படுத்தும் உண்மைகள்…சர்க்கரை மிகுந்த பானங்கள் புற்றுநோயை உண்டாக்குமா?

nathan

ருசியான பஞ்சு போல் இட்லி வேண்டுமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! சமையலறை பொருட்களை பாதுகாக்கும் சில பயனுள்ள குறிப்புகள்….!

nathan

சத்தான சுவையான ஓட்ஸ் குழிப்பணியாரம்

nathan

அடேங்கப்பா! பழைய சாதத்தில் இத்தனை மருத்துவ பயன்கள் உள்ளதா…?

nathan

உடல்நலன் காக்கும் உணவுமுறை!

nathan