ஆங்கில மருத்துவத்தில் ஹெமிராய்ட் என்று அழைக்கப்படும் மூலநோய் மலக்குடல் மற்றும் ஆசனவாய் உள்ளே மற்றும் வெளியே உள்ள நரம்புகள் வீங்குவதால் ஏற்படும்.
மலம் கழிக்கும் போது சிரமம், எரிச்சல் மற்றும் வலி ஆகியவை இதன் அறிகுறிகள், மலம் வெளியேறும் போது அதிக அழுத்தம் கொடுப்பதால் சில சமயங்களில் ரத்த போக்கும் ஏற்படலாம்.
மூல நோயை கவனிக்காமல் விட்டு விட்டால் அது குடல் புற்றுநோய் மற்றும் ஆசனவாய் புற்று நோய்க்கு வழி வகுக்கும் என்பது பயப்படக்கூடிய உண்மை
இருந்தாலும் சில பாரம்பரிய மருத்துவ முறைப்படி மூல நோயை எளிதாக குணப்படுத்த முடியும். அதன்படி வீட்டில் இருக்கும் பொருட்கள் வைத்தே மூலம் என்னும் நோயை விரட்டி விட முடியும்.
முள்ளங்கி சாறு
தினம் இரண்டு கப் முள்ளங்கி சாறு அருந்துவது மூல நோயின் பொது மருத்துவ தீர்வில் ஒன்றாகும். முதலில் 1/4 கப் அதன் பின் அரை கப் என படிப்படியாக இதன் அளவை அதிகரித்தல் நல்லது. நாளொன்றுக்கு இரண்டு முறை இந்த ஜூஸ் அருந்த வேண்டும்.
அத்திப்பழம்
மூன்று அல்லது நான்கு உலர்ந்த அத்திப்பழத்தை எடுத்து இரவில் நீரில் ஊற வைக்க வேண்டும், பின் காலையில் எழுந்து முதல் பானமாக அந்த நீரோடு இந்த அத்திப்பழத்தையும் பருக வேண்டும், இதனால் நாள்பட்ட மூலம் குணமாகலாம்.
மாதுளம் பழ தோல்
மாதுளம் பழத்தின் தோலை எடுத்து நீரில் கொதிக்க வைக்கவும், இந்த நீரை தினம் இரண்டு முறை பருகி வரலாம்.
இந்த மாதுளம் பழ தோல் நீர் மூலம் வயிற்றில் உள்ள அனைத்து கோளாறுகள் மற்றும் புண்கள் ஆகியவை குணமாகும், பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு வலிகள் குறையும்.
ஆட்டு பால்
ரத்த போக்கு ஏற்படும் அளவிற்கு வளர்ந்த மூல நோய்கள் கூட ஆட்டு பாலினால் குணமாகும், அரை கப் ஆட்டு பாலுடன், கடுகு பொடி, அரை ஸ்பூன் சேர்த்து சிறிது சர்க்கரை சேர்த்து அருந்தி வர மூலவியாதி காணாமல் போகும்.
மோர்
மூல வியாதி குணமடைய மோரில் கல் உப்பு சேர்த்து, கொஞ்சம் இஞ்சி மற்றும் மிளகு சேர்த்து அருந்தி வரவும்.
மாங்கொட்டை
நாள்பட்ட மூலத்திற்கு தீர்வாக காயவைத்த மாங்கொட்டை இரண்டை எடுத்து மிக்ஸியில், இடித்து பொடித்து கொள்ளவும். தினமும் இரண்டு ஸ்பூன் இந்த பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வரவும்.
வாழைப்பழம்
மூல நோய்க்கு சிறந்த நிவாரணியாக வாழைப்பழம் பார்க்கப்படுகிறது. நாட்டு வாழைப்பழம் எடுத்து நன்கு பிசைந்து அதனுடன் பால் சேர்த்து கூழ் பதத்தில் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
நாவல் பழம்
கோடை காலத்தில் கிடைக்கும் நாவல் பழம் மூலத்திற்கு மிகவும் நல்லது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 5 நாவல்பழங்களுடன் சிறிது உப்பு சேர்த்து உண்டு வரலாம், இதன் மூலம் நீரிழிவும் கட்டுப்படும்.
நூல்கோல்
நூல்கோல் இலைகள் கேரட் மற்றும் கீரை ஆகியவற்றை கொண்டு சாறு போல செய்து, தினமும் 50மிலி அளவில் அருந்தி வந்தால் மூல நோய் குணமாகும்.
பாகற்காய் இலைச்சாறு
மூல நோய் சரியாக காலையில் நீர்மோருடன் பாகற்காய் இலை சாற்றை கலந்து, கொஞ்சம் மஞ்சள் சேர்த்து அருந்தி வரலாம். மஞ்சள் கிருமி நாசினி என்பதால் உள்ளிருக்கும் காயங்களில் உள்ள கிருமிகள் கொல்லப்படும்
கருஞ்சீரகம்
கருப்பு சீரகம் எனப்படும் சாஜுரா வை பொடியாக்கி, தினமும் ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் அளவில் கலந்து பருகலாம், காலையில் பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.
இதேபோன்று ஒரு கைப்பிடி கருப்பு எள்ளை எடுத்து இரண்டு மடங்கு நீரில் கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து எள் வெந்தபின் இறக்கவும்.
பின் அதனை அரைத்து அதனுடன் வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வர மூல நோய் முகவரியின்றி காணாமல் போகும்