உடற்பயிற்சி செய்கிறவர்கள், செய்ய விரும்புகிறவர்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றியும், உணவுமுறைகள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
உடற்பயிற்சி செய்பவர்களின் கவனத்துக்கு…
உடற்பயிற்சி செய்கிறவர்கள், செய்ய விரும்புகிறவர்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றியும், உணவுமுறைகள் பற்றியும் சில முக்கிய ஆலோசனைகளை அறிந்து கொள்ளலாம்.
* உடல் அமைப்புக்கும் உடற்பயிற்சிக்கும் சம்பந்தம் கிடையாது. அதாவது, எடையைக் குறைப்பதற்காகவோ அதிகரிப்பதற்காகவோ உடற்பயிற்சி பயன்படாது.
ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இயங்குவதற்கே உடற்பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.
* காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதே அனைத்து வகையிலும் நன்மை பயக்கக்கூடியதாக அமையும்.
உடற்பயிற்சி செய்யும்போது எண்டார்பின் என்னும் அமிலம் நமது உடலில் சுரக்கும்.
இது உடலுக்குப் புத்துணர்வை ஏற்படுத்துவதால் அன்றைய தினம் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும்.
* ஒரு நாளைக்கு 60 முதல் 90 நிமிடங்கள்வரை உடற்பயிற்சி செய்வதே போதுமானது. குடும்பத்தினருடன் பயிற்சிகள் மேற்கொள்வது உளவியல் ரீதியாகவும் பலன் அளிக்கக்கூடியதாக அமையும்.
* வாக்கிங், ஜாக்கிங் செல்லும் 15 நிமிடங்களுக்கு முன்பு திரவ உணவு எடுத்துக் கொள்வதே சரியானது.
பாலோ அல்லது ஏதேனும் ஒருவகை பழச்சாறோ… வாழைப்பழங்களும் சரியானதுதான்.
* ஜிம்மில் உடற்பயிற்சி செய்ப நினைப்பவர்கள் ஆர்வக்கோளாறு காரணமாக எடுத்த உடனேயே அனைத்து கருவிகளையும் பயன்படுத்தக்கூடாது.
முதல் 10 நாட்களுக்கு எளிய பயிற்சிகளிலேயே தொடங்க வேண்டும்.
* உடற்பயிற்சியில் ஈடுபடும்போது தண்ணீர், ஜூஸ் சாப்பிடலாம். பயிற்சிகள் முடித்த பின்னர் முட்டையின் வெள்ளைக்கரு, கொண்டைக்கடலை, பச்சைப்பயறு, ஆரஞ்சு, தக்காளி ஜூஸ் மாதிரியான உணவுகளைச் சாப்பிடலாம்.
குளித்து முடித்தபிறகு, மிதமான முறையில் இட்லி, நார்ச்சத்து நிரம்பிய காய்கறிகள் மற்றும் வழக்கமான உணவுகளை சாப்பிடலாம்.
* எண்ணெயில் பொரித்த உணவுகளையும் மசாலா உணவு வகைகளையும் தவிர்த்துவிடுவது நல்லது.. மேலும், ஒரேநேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது.
*உணவுக்குப் பிறகு உடற்பயிற்சியில் ஈடுபடக்கூடாது.