35.1 C
Chennai
Monday, Aug 31, 2026
ஆரோக்கியம்எடை குறைய

உடற்பயிற்சி,யோகா செய்தும் திடீரென்று 10 கிலோ எடை கூடுவது ஏன்?

ld2274டியர் சார், எனது மகளுக்கு 22 வயதுதான் ஆகிறது. இறுதியாண்டு இன்ஜினியரிங் படித்துக்கொண்டிருக்கிறாள். இவ்வளவு நாட்கள் எந்த மாற்றமும் இல்லாமல் இயல்பான வளர்ச்சியுடன் இருந்த அவளது உடல் எடை திடீரென 6 மாதத்திற்குள் 10 கிலோ வரை கூடி மிகவும் சங்கடமான  தோற்றமாகியுள்ளது. இத்தனைக்கும் அவள் தினமும் யோகா, மெடிடேஷன் எல்லாம் பள்ளிப் பருவத்திலிருந்து கடைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவள்.  தவிர முறையான உடற்பயிற்சி மற்றும் விழிப்புணர்வுடன் உணவுக்கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்கும் கட்டுப்பாடான படித்தவர்கள் நிரம்பிய குடும்ப  பின்னணியிலேயே வளர்ந்தவள்.

இப்போதும் அவளது நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனாலும் அவளது அந்த உடல் எடை எங்கள் குடும்ப உறவினர்கள் மற்றும் அவளது  நண்பர்களிடையே அவளது திருமணத்திற்கான விவாத விஷயமாக மாறிப் போயிருக்கிறது. அவள் எப்போதும் மனம் உடைந்தே காணப்படுகிறாள். யார்  என்ன கூறினாலும் எரிந்து விழுகிறாள். முகமும் பொலிவிழந்து எதையோ இழந்ததைப் போன்றே உள்ளது. இதற்கான தீர்வுதான் என்ன? அவளை  உற்சாகமாக்க என்னதான் வழி கூறுங்கள்… அவளது உடல் பருமனுக்கும், நடவடிக்கை மாற்றத்துக்கும் ஏதேனும் தொடர்பிருக்குமா?

அன்புள்ள சகோதரி,உங்களது மகளின் பிரச்னைகளை படிக்கும்போது இது adolescent depression எனப்படும் ‘வளர் இளம்பருவ  மனச்சோர்வு’ நோயின் வெளிப்பாடாக இருக்க 70 சதவிகித வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இத்தகைய நோயின் காரணம் என்னவெனில், சூழ்நிலைகளின்  நெருக்கடி களால் எளிதில் பாதிக்கப்படும் பலவீனத்துடன் உள்ள இளைஞர்களின் உடலை கட்டுப்படுத்தும் உறுப்பான மூளையின்  ஹைப்போதலாமஸில் ஏற்படக்கூடிய ஒருவித தளர்வு மற்றும் இடைக்கால குழப்ப நிலையே ஆகும். இதன் வெளிப்பாடு எப்படி வேண்டு மானாலும்  இருக்கலாம்.

ஏனெனில் நமது உடலின் இதயத்துடிப்பு முதல் சுண்டுவிரல் நக வளர்ச்சி வரையில் அனைத்திற்குமான முறையான கட்டளைகளைப் பிறப்பித்தும்  கட்டுப்படுத்தும் காரணிகளுள் ஒன்றாக இருப்பது ‘ஹைப்போதலாமஸ்’ என்னும் அதிகம் ஆராய முடியாத மூளையின் உணர்வுப் பகுதியாகும். இதன் காரணமாக ஒரு இளைஞனோ, இளம் வயது பெண்ணோ, சமாளிக்க முடியாத மற்றும் விரும்பத்தகாத சூழ்நிலையை எதிர்கொள்ள நேரும்போது  மூளை தனது கட்டுப்பாட்டை இழந்து குழப்பத்திற்குள்ளாகிறது. அந்த நேரத்தில் அதிலிருந்து பிறப்பிக்கப்படும் கட்டளைகள் முற்றிலும் முரண்பட  ஆரம்பிக்கின்றன.

இத்தகைய நிலை ஏற்பட்டுவிட்டால் நாம் என்னதான் சுண்ணாம்பு சத்தை எலும்பிற்கு கொடுத்தாலும், மூட்டுவலி வருவதையோ அல்லது என்னதான்  காய்கறி, பழங்கள் கொடுத்தாலும் தோல் நோய் பாதிப்பதையோ அல்லது என்னதான் உடற்பயிற்சி செய்தாலும் உடல் எடை கூடுவதையோ சிறிது கூட  கட்டுப்படுத்த முடியாது. ஏனெனில் இத்தகைய குழப்பநிலையின்போது நாம் செய்யும் பல மணி நேர உழைப்பும் கூட சிறிதும் மூளைக்கு உழைப்பாக  உணரப்படுவதில்லை. நாம் எடுத்துக்கொள்ளும் உணவின் தேவைகளை மூளை உணர முடியவில்லை.

இதனால் இத்தகைய சோர்வு நிலை உள்ளவர்கள் மூன்று வேளைகளும் சப்பாத்தி சாப்பிட்டாலும் கூட அதிலுள்ள நார்ச்சத்து கல்லீரலுக்கு சென்று  சேமித்த கொழுப்பை கழிவிரக்கம் போல அங்கிருந்து நீக்கி தேவையில்லாத உடல் செல்களுக்கு அனுப்பி உடல் எடையை உடனடியாக கூட்டும்  வாய்ப்புள்ளது. இதற்கு என்னதான் தீர்வெனில் உங்கள் மகளிடம் ஒரு தோழியைப் போல கலந்தாலோசித்து அவரிடம் உள்ள உண்மையான  பிரச்னைகளை கண்டறிந்து அதற்கான தீர்வை நோக்கி செலுத்த முற்படுங்கள்.

ஏதேனும் உங்களிடம் சொல்ல முடியாத அல்லது சொல்லத் தயங்கும் விஷயங்களாக இருப்பின் அதை அறிய அவரை ஒரு மனநல ஆலோசகரிடம்  அனுப்பி மறைமுகமாகவாது அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். பின் அதனை நிறைவேற்றுவதில் எந்த தவறும் இல்லை எனும் சாத்தியங்கள்  இருப்பின் அதை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளுங்கள்.

அதன் பின்பு உங்கள் மகள் 3 நாட்கள் விடாமல் தூங்கினாலும் சரி, மூன்று வேளையும் பீட்சா, பர்கர் சாப்பிட்டாலும் சரி 90 கே.ஜி தாஜ்மகாலாகவே  வலம் வந்து உங்கள் மகிழ்ச்சியையும் கூட்டி உங்கள் எடையையும் குறைத்து, 5 வயதை திரும்பப் பெறவும் வாய்ப்புள்ளது. ஏனெனில், நவீன  உளவியல் ஆய்வு கூறுவதுபடி மனித மூளைக்கு கிடைக்கும் உண்மையான மகிழ்ச்சியை விட அதிகமான கலோரியை எரிக்கும் உடல் உழைப்பு  தற்போது இல்லையாம்!

Related posts

டி.என்.ஏ-வை பற்றி தெரிந்துகொண்டால், உடல் எடையை விரைவில் குறைக்க முடியும்!!

nathan

எடையைக் குறைக்க எளிய ஆலோசனைகள்

nathan

தினமும் அரைமணிநேரம் தவறாமல் யோகா பயிற்சி செய்வது நல்லது…..

sangika

இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க எளிய வழிமுறைகள்

nathan

ஃபிட்னஸ்ஆர்வம் கொண்ட எல்லோரும் இதனை அறிந்துகொள்வது அவசியம்!…

sangika

உடல் குளிர்ச்சியாக வெந்தயத்தை இப்படி பயன்படுத்துங்கள்!….

sangika

வயிறு தொடர்பாக பிரச்சனைகளுக்கு

nathan

உடலில் ரத்தத்தின் அளவு குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ அப்புறம் என்ன நடக்குமென்று தெரியுமா?

sangika

தொப்பையை குறைக்க இவைகள் தான் சிறந்த வழிகள்

nathan