மன அழுத்தத்துக்கும் பசிக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்று மருத்துவ உலகம் ஆணித்தரமாக சொல்கிறது. சோகத்தாலோ கோபத்தாலோ மன அழுத்தம் உள்ளவர்களில் சிலருக்கு இந்த விநோதம் நிகழும். மிகுந்த மன அழுத்தத்தில் இரு க்கும் போதுதான் எந்த உணவு கிடைக்கிறதோ அதனை அதிகளவில் சாப்பிடுவார்கள்.
மன அழுத்தத்தில் உள்ள பலரில் சிலருடைய உடலில் கார்ட்டிசோல் மற்றும் அட்ரீனலின் ஆகிய இரண்டு ஹார்மோன்கள் சுரக்கிறதாம்.
சில பல வேதி மாற்றங் களுக்குபின் இறுதியில் அது அதீத பசியாக உருவெடுத்து விடுகிறது.
இதன் காரண மாக அதிகமாக உண்ணகிறார்கள். இப்படி அதிகமாக உண்ணும்போது நாளடைவி ல் உடல் எடையும் கூடிவிடுகிறது.
உடல் எடை கூடிவிடுவதால் எண்ணற்ற நோய்க ள் வர வாய்ப்புக்கள் அதிகம் என்கிறது மருத்துவ உலகம்.