28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
kitchen teps
அறுசுவைஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

சுவையான சமையலுக்கு சின்னதா சில டிப்ஸ்!…

ரவா தோசை செய்யும்போது மைதா ரவை சேர்த்து அத்துடன் சிறிதளவு சாதத்தையும் மிக்சியில் குழைய அரைத்து தோசை செய்தால் மொறு மொறுப்பாக முறுகல் தோசை மாதிரியே இருக்கும்.

* பாம்பே காஜா செய்யும்போது மடிப்புகளில் கலர் தேங்காய்த் துருவலை தூவினால் பார்க்க அழகாக இருக்கும்.

* கேரட் அல்வா செய்யும்போது கேரட்டை கொதிக்கும் நீரில் போட்டு, பின்பு குளிர்ந்த நீரில் சிறிது நேரம் வைத்துவிட்டு தோலை சீவினால் மிகச் சுலபமாக தோல் நீங்கி விடும்.

kitchen teps

* உளுத்தம்பருப்பை அரை ஊறல் ஊறவைத்து காய்ந்தமிளகாய், உப்பு சேர்த்து ஒன்றும் இரண்டுமாய் நைசாக இல்லாமல் அரைத்து, அதில் பச்சை கடுகு சேர்த்து சிறுசிறு உருண்டையாக்கி வெயிலில் காயவைத்து டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டால், இதை பொரித்த குழம்பு, கூட்டு இவைகளுடன் எண்ணெயில் பொரித்துப் போட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

* பிஞ்சாக உள்ள பீன்ஸை நாரெடுத்து விட்டு நீளவாக்கில் அரிந்து கொண்டு அத்துடன் பெரிய வெங்காயத்தையும் கலந்து பக்கோடா செய்தால் எண்ணெயில் வெந்த பீன்ஸ் வித்தியாசமான சுவையுடன் உண்பதற்கு நன்றாக இருக்கும்.

* புதினா, தக்காளி இரண்டையும் நன்கு அரைத்து பஜ்ஜி மாவுடன் கலந்து செய்தால் பஜ்ஜி மணமாகவும், ருசியாகவும் இருக்கும். சுவை கூடும்.

* துவையல் அரைக்கும்போது வழக்கமாக வைத்து அரைக்கும் பொருட்களுடன் வறுத்த பயறு வகைகள் சேர்த்து அரைத்தால் சுவை கூடும்.எலுமிச்சை ஊறுகாய் போடும்போது ஓரிரு இஞ்சித் துண்டுகளை வதக்கி அதனுடன் போட்டு வைத்தால் ஊறுகாயின் சுவை கூடும்.

* நார்த்தங்காய் ஊறுகாய் போடும் போது 1 டீஸ்பூன் மிளகு, 1 டீஸ்பூன் சீரகம் இரண்டையும் லேசாக வறுத்து அரைத்து போட்டால், சுவையாக இருப்பதுடன் நார்த்தங்காயின் ஈரத்தன்மை நீங்கும்.

* கொள்ளு பயரை 1 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து, கடாயில் வறுக்கவும். வறுக்கும்போதே 1 டீஸ்பூன் எண்ணெயுடன் மிளகாய் பொடி, உப்பு, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். மாலை நேரத்தில் சாப்பிட சுவையாக இருக்கும். உடலில் உள்ள கொழுப்புகள் கரையும்.

Related posts

நாள்பட்ட நெஞ்சு சளி, மூக்கடைப்பு அனைத்திற்கும் ஒரே தீர்வு!!சூப்பர் டிப்ஸ்!

nathan

உங்களுக்கு தெரியுமா தினமும் இத்தனை கிளாஸ் தண்ணீர் குடிச்சா உங்க எடையை சீக்கிரம் குறைச்சிடலாம் ?

nathan

அல்சர் நோயை குணப்படுத்தும் திராட்சை

nathan

30 வயதை நெறுங்கும் பெண்களின் சில எளிய உடற்பயிற்சிகளைச் செய்து வந்தால் வயிற்றுப் பகுதியில் த‌சைகள் வலுவாகும்

nathan

அவலை இவ்வாறும் செய்து சாப்பிடலாம்…..

sangika

உங்களது பர்ஸில் மறந்தும் இந்த பொருளை வைக்காதீங்க!தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிந்துகொள்வோமா? ஊரடங்கு காலத்தில் குழந்தைகளை சுறுசுறுப்பாக்கும் செயல்கள்…

nathan

சூப்பரான மீன் முட்டை பிரை!….

sangika

தினசரி இந்த 10 விஷயங்களை செய்ய தவறாதீர்கள்! #DailyMotivation

nathan