36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்களுக்கு மனஅழுத்தத்தை அதிகம் ஏற்படுத்துமாம்!

உடல் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்தும் ஆபத்தான காரணிகளில் முக்கியமான ஒன்று மன அழுத்தம்.

நம்மில் பலருக்கும் பல காரணம் மற்றும் காரணிகளால் பதட்டம் ஏற்படும். இவற்றை கட்டுப்படுத்த நாம் சில பழக்கவழக்கங்களை கைவிட வேண்டும். நாம் தெரிந்தோ தெரியாமலோ இவற்றை செய்து கொண்டிருப்போம். அப்படியான விஷயங்கள் என்னென்ன, அவற்றை எப்படி தவிர்ப்பது என்று பார்ப்போம்.

கைபேசி:

நாகரிக உலகில் தொடுதிரை கைபேசி இல்லாத கைகளை பார்ப்பதே அரிது என்கிற சுழலில் ஓர் அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதாவது, அடிக்கடி கைபேசியை பார்த்து கொண்டே இருப்பது பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை அதிகரிக்கும் அபாயம் ஏற்படுத்தும். அதோடு கைபேசி பயன்பாடு அதிகப்படியாக இருந்தால் உணர்ச்சி நிலைகள் சீரற்று இருக்குமாம்.

தூக்கம்:

சரியான ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போகும்போது, உடலில் தானாகவே பதட்டம் ஏற்படும். மேலும் ஹார்மோன் சுரப்பில் சீரற்ற தன்மை, மன அழுத்தம் போன்றவை ஏற்படும்.

காபி:

உடலில் இரத்த அழுத்தம் குறையும்போது காபி குடிப்பது ஒருவகையில் நமக்கு சௌகரியத்தை கொடுப்பதாக இருக்கும். ஆனால் காபி குடிப்பதால் இருதய துடிப்பு அதிகரித்து, நடுக்கம், பதட்டம் , மனஅழுத்தம் போன்றவற்றை கொடுக்கும்.

உணர்ச்சி நிலை:

கடந்த காலத்தில் நடந்தது அல்லது நடக்க போவது குறித்து சிந்தித்து கொண்டே இருந்தால் நமக்கு எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும். இவை மனஅழுத்தம் மற்றும் பதட்டத்தை அதிகரிக்கும்.

தனிமை:

மற்றவர்களை காட்டிலும் தனிமையில் இருப்பவர்களுக்கு மனநல பிரச்னை ஏற்பட 1.39 முதல் 2.43 மடங்கு வாய்ப்புள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகிறது.

உணவு:

மூன்று வேளையும் சரியான விகிதத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். உடலுக்கு தேவையான உணவு சரியாக எடுத்து கொள்ளாவிட்டால் கூட பதட்டம், மனஅழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

Related posts

உப்புசத்தால் உண்டாகும் பிரச்னைகள்!…

sangika

7 மணி நேரத்திற்கு குறைவான தூக்கம் ஆயுளை குறைக்கும்

nathan

அப்ப இந்தப் பழம் சாப்பிடுங்க..! உங்களுக்கு எடை குறைய வேண்டுமா?

nathan

நீங்கள் உணவில் உப்பை அதிகம் சேர்க்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

nathan

கட்டாயம் இதை படியுங்கள்.. கட்டாயம் இதை படியுங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

இதை முயன்று பாருங்கள் உடல் எடையை குறைக்கும் டிராகன் பழம்

nathan

கொழுப்பை குறைக்கும் உணவுகள்

nathan

மழைக்காலத்தில் குழந்தைகளை எப்படி பாதுகாப்பது? பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan