27.1 C
Chennai
Saturday, May 24, 2025
leman rice
சமையல் குறிப்புகள்ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

சமையல் மட்டும் முக்கியம் இல்லை இவற்றையும் கருத்தில் எடுங்கள்!

எலுமிச்சை சாதம் செய்யும்போது, இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைத்து வதக்கி, பின் சாதம் போட்டுக் கிளறினால் சுவையாகவும், மாறுதலாகவும் இருக்கும்.

தேங்காய் சாதம், புளி சாதம், மாங்காய் சாதம், எலுமிச்சை சாதங்களுக்கு முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்துச் சேர்த்தால் வாசனை தூக்கும், பார்ப்பதற்கும் அழகாக இருக்கும்.

leman rice

சிறிது தனியாவையும், காயவைத்த 2 மிளகாயையும் எண்ணெயில் விட்டு வறுத்துப் பொடி செய்துகொண்டு, கலந்து வைத்திருக்கும் எலுமிச்சம்பழச் சாதத்தில் தூவிக் கிளறினால், தனியா பொடி ஊறி எலுமிச்சை சாதம் ருசி அபாரமாக இருப்பதுடன், வித்தியாசமாகவும் கலராகவும் இருக்கும்.

சாதம் மீந்துவிட்டால் அதனுடன் ஜவ்வரிசியை வெந்நீரில் ஊறவைத்து, பச்சைமிளகாய், பெருங்காயம், உப்பு போட்டு அரைத்து, குக்கரில் வைத்து நான்கு விசில் வந்தவுடன் இறக்கி, சாதத்தில் கொட்டிக் கலந்து பிளாஸ்டிக் பேப்பரில் கிள்ளி வைத்து வெயிலில் காயவைத்து எடுத்தால் சூப்பரான வத்தல் தயார்.

புளிக்காய்ச்சல் தயாரித்துக்கொண்டு புளிசாதம் கிளறுவதற்கு முன், சூடான சாதத்தில் கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றிக் கிளறவும். சிறிது மிளகு, வெந்தயம், சீரகம், கடலைப் பருப்பு ஆகியவற்றை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு, புளிக்காய்ச்சலுடன் அந்தப் பொடியையும் தேவையான அளவுக்கு தூவி கிளறினால், கோயில் பிரசாதம் போல் அருமையாக இருக்கும்.

சாதம் சமைக்கும்போது ஒரு தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்தால், பருக்கைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் தனித்தனியாக இருக்கும்.

Related posts

சளித்தொல்லைக்கு உகந்த தூதுவளை ரசம்

nathan

உடலுக்கு குளுமை தரும் அரைக்கீரை

nathan

பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் இவ்வளவு தீமையா? தெரிஞ்சிக்கங்க…

nathan

உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ளும் மிளகாய்-தேன் ஃப்ரூட் சாலட் செய்வது எப்படி !!

nathan

சூப்பரான மீன் வறுவல்…வேகமாக செய்வது எப்படி?

nathan

Animal workout பலராலும் விரும்பப்படுவதற்கான காரணம் இதுதானாம்!…

sangika

வாழை‌ப்பழ‌ம் சா‌ப்‌பி‌ட்டா‌ல்

nathan

உங்கள் மதிய உணவு ஆரோக்கியமானதுதானா?

nathan

சுவையான சௌ செள கூட்டு

nathan