1531562233 7072
ஆரோக்கிய உணவு

கனவாய் மீன் வறுவல் செய்ய..!

தேவையான பொருட்கள்:

கனவாய் மீன் – கால் கிலோ
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு – 2 கைப்பிடி அளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
சின்னவெங்காயம் – 2 கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் – 6
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சைப்பழம் – 1
மிளகுத்தூள்- 2 டீஸ்பூன்
செய்முறை:

மீனை சுத்தம் செய்து, வட்டமாக நறுக்கிக்கொள்ளவும். இதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து 5 நிமிடம் ஊற வைத்துக்கொள்ளவும். இதை பொட்டுக்கடலை மாவில் புரட்டி எடுத்து, தவாவில் சிறிது எண்ணெய் விட்டு 2 நிமிடம் இருபுறமும் வேக விட்டு எடுக்கவும். 2 நிமிடத்துக்கு மேல் வேகவைத்தால், ரப்பர் போலாகிவிடும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கறிவேப்பிலை, சின்னவெங்காயம், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். இதில் மீன் சேர்த்து லேசாக வதக்கிவிட்டு, சிறிது உப்பு, எலுமிச்சைச்சாறு பிழிந்து அடுப்பை அணைக்கவும். பரிமாறும் முன்பு மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.1531562233 7072

Related posts

எள் கொண்டு தயாரிக்கப்படும் நல்லெண்ணெயில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளது….

sangika

வயிற்று உபாதைகளை குணப்படுத்தும் வெண்டைக்காய்

nathan

உடல் எடையைக் கூட்டும் உளுந்தங்களி

nathan

நாம் தினமும் ஒரு பச்சை வெங்காயத்தை சாப்பிடுவது கோடைகாலத்தில் நம்மை உற்சாகப்படுத்தப்படுகிறது. ஏனெனில் இது உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும் மற்றும் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.

nathan

உங்க இதயத்திற்கு ஆரோக்கியம் தரும் சிவப்பு நிற பழங்கள்..இவ்வளவு நன்மைகளா?

nathan

வெந்தயத்தில் இவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்கா?நம்ப முடியலையே…

nathan

இம்யூனிட்டிக்கான சிறந்த உணவுகளை தெரிவு செய்து உண்பது அவசியம் நம்மை பாதுகாப்பது இன்றியமையாக ஒன்றாக உள்ளது.

nathan

உடலுக்கு வலுசேர்த்து ஆரோக்கியம் காக்கும் பயறுகள்!

nathan

எப்போதும் வெந்நீரில் துணி துவைப்பதால் ஏற்படும் குறைபாடுகள் என்ன?

nathan