கிராம்பு என்பது வெப்ப மண்டலப் பிரதேசங்களிலும் வெப்பமண்டலம் அணவிய பிரதேசங்களிலும் வளரும் சைசீஜியம் ஆரோமேட்டிக்கம் எனும் மரத்தில் பூக்கும் பூக்களாகும். நாம் அன்றாடம் பயன்படுத்துவது உலரவைக்கப்பட்ட கிராம்புப் பூக்களாகும்.
இந்தியாவிலும் சீனாவிலும் இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சமையலில் மசாலா பொருளாகவும் மட்டுமின்றி மருத்துவப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிராம்பின் மருத்துவ நன்மைகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்:
செரிமானம்: இரைப்பையில் சுரக்கும் வேதிப்பொருள்களை ஊக்குவிப்பதன் மூலம், செரிமானத்திற்கு உதவுகிறது என்று கருதப்படுகிறது. மேலும் கிராம்பு வயிற்றுப்பொருமல், நெஞ்செரிச்சல், குமட்டல், அஜீரணக் கோளாறு, போன்ற பிரச்சனைகளையும் குறைக்கும் என்று கூறப்படுகிறது.
புற்றுநோய் எதிர்ப்புத் திறன்: நுரையீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் கிராம்பு உதவக்கூடும் என்று ஆய்வகப் பரிசோதனைகள் தெரிவித்துள்ளன. எலிகளுக்கு கிராம்பு கரைசலை இரத்தக் குழாய்களின் வழியே ஊசி மூலம் செலுத்தும்போது, புற்றுநோய் செல்களைப் பெருகச் செய்யும் புரதங்களை அழிப்பதாகக் கண்டறியப்பட்டது. இதிலிருந்து கிராம்பின் புற்றுநோய் எதிர்ப்புத் திறன் தெரிகிறது.
பாக்டீரிய எதிர்ப்புப் பண்பு: கிராம்பு பாக்டீரிய எதிர்ப்புப் பண்பு கொண்டதாகும். பல்வேறு பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படும் திறனுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. கிராம்பு எண்ணெய் வாயில் இருக்கும் நோய்பரப்பும் கிருமிகளை கட்டுப்படுத்துவதிலும் பிரபலமானதாகும். அதுமட்டுமின்றி அதன் வலி நிவாரணப் பண்பும் எல்லோரும் அறிந்தது.
நீரிழிவுநோயைக் கட்டுப்படுத்துதல்: எலிகளைக் கொண்டு செய்த ஆராய்ச்சிகளில், கிராம்பு சில வழிகளில் இன்சுலின் போலச் செயல்பட்டு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது கண்டறியப்பட்டது.
குறிப்பிட்ட சில தாவரங்களிலிருந்து கிடைக்கும் பொருள்களைக் கொண்ட உணவு வகைகளை எடுத்துக்கொள்வது, நீரிழிவுநோய் சிகிச்சைக்கு உதவிகரமாக இருக்கும் என்றும், கிராம்பிலிருந்து பெறப்பட்ட பொருள்கள் இன்சுலின் போலவே செயல்படுவதைப் பற்றியும் சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
கல்லீரலைப் பாதுகாக்கிறது: கல்லீரலின் வளர்சிதைமாற்றமானது நீண்ட கால அளவில், இரத்தத்தில் கலக்கும் தடையின்றிக் கடத்தப்படும் பொருள்களை அதிகரித்து, கல்லீரலில் இருக்கும் ஆக்சிஜனேற்றிகளின் அளவைக் குறைக்கிறது. கிராம்பில் ஆக்சிஜனேற்ற எதிர்ப்புப் பொருள்கள் அதிகமுள்ளன.
இவை இரத்தத்தில் தடையின்றிக் கடத்தப்பட்டுவரும் பொருள்களால் உடல் உறுப்புகள் பாதிக்காமல் காக்கின்றன. குறிப்பாக கல்லீரல் இதனால் நன்றாகப் பாதுகாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலும்புகளைப் பாதுகாத்தல்: ஆல்கஹால் மற்றும் நீர் கலந்த கிராம்புச் சாற்றில் ஈகனால், ஃபிளேவோன்கள், ஐசோஃபிளேவோன்கள் மற்றும் ஃபிளேவோனாய்டுகள் போன்ற ஃபீனாலிக் அமிலச் சேர்மங்கள் உள்ளன.
இந்தச் சாறு ஆய்வகச் சூழலில், எலும்பு அடர்த்தியையும் எலும்பில் இருக்கும் தாதுக்களைத் தக்கவைப்பதிலும் உதவிகரமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு காரணிகளே ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனைக்கு முக்கியக் காரணங்களாக உள்ளன.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துதல்: கிராம்பு, இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தக்கூடிய சேர்மங்களைக் கொண்டுள்ளது என்றும், இதனால் அதீத உணர்வு எதிர்வினைகள் பிரச்சனையைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்றும் ஆய்வக சோதனைகளில் தெரியவந்துள்ளது.
* தகவலை பிறரும் அறிந்து கொள்ளும் வண்ணம் தயவுசெய்து அதிகமாகப் பகிருங்கள்…