27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
06 1496743095 1
ஆரோக்கியம் குறிப்புகள்

இந்த ஒரு விஷயத்தை கரெக்ட்டா செஞ்சுட்டு வந்தா 1/2 கிலோ வரை உடல் எடை குறைக்கலாம் தெரியுமா?

உடல் எடை குறைக்க பயிற்சி மட்டுமே போதாது. பயிற்சி செய்யும் அளவுக்கு சீராக டயட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். சீரான டயட் மேற்கொள்வோர் நடைப்பயிற்சி மூலம் எவ்வளவு உடல் எடை குறைக்க முடியும் என இந்த கட்டுரை மூலமாக அறிந்துக் கொள்ளலாம்.

எடை தூக்கி பயிற்சி செய்வதை கட்டிலும் நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, சைக்ளிங் போன்றவை உடல் எடை குறைக்க அதிக பயனளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அதிக உடல் பருமனாக இருப்பவர்கள் இந்த பயிற்சிகள் மேற்கொண்டு உடல் எடை குறித்த பிறகு தசை வலுவை சீராக வைத்துக் கொள்ள உடை தூக்கும் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்…

ஒரு மணிநேரம் நீங்கள் தினமும் ஒரு மணிநேரம் நடைப்பயிற்சி மேற்கொண்டால் சராசரியாக 400 கலோரிகள் வரை கரைக்கலாம். இன்னும் சரியாக கூற வேண்டும் எனில் 2000 ஸ்டேப் நடந்தால் நூறு கலோரிகள் வரையும் எரிக்கலாம். எனவே ஒரு மையில் தூரம் நடந்தால் ஒரு பவுண்ட் (450 கிராம்) வரை எடை குறைக்கலாம்.

பக்கவிளைவுகள் இன்றி! இதனால் சேரான முறையில் நீங்கள் இயற்கையாக, பக்கவிளைவுகள் இல்லாமல் உடல் எடையை குறைக்கலாம். நீங்கள் மனதில் முக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது இந்த பயிற்சியுடன் சேர்த்து ஆரோக்கியமான டயட்டும் பின்பற்ற வேண்டும் என்பதே.

தவிர்க்க வேண்டிய தவறு! ஏனெனில், சிலர் தினமும் ஒரு மணிநேரம் நடைபயிற்சி மேற்கொண்ட பிறகு பஜ்ஜி, போண்டா சாப்பிட்டுவிட்டு தான் வீடு திரும்புவார்கள். இதற்கு நீங்கள் அந்த பயிற்சி மேற்கொள்ளாமலே இருக்கலாம்.

கொஞ்சம் டிப்ஸ்! உங்கள் ஸ்கூல், காலேஜ், அலுவலகம் ஓரிரு கிலோமீட்டர் தொலைவில் இருந்தால் நீங்கள் நடந்தே சென்று வரலாம். தனியகா பயிற்சி செய்வது போன்ற எண்ணமே இருக்காது. மார்கெட், தியேட்டர், கேளிக்கை இடங்கள் போன்றவை அருகாமையில் இருந்தால் நடந்தே சென்று வாருங்கள் பஸ்-க்காக காத்திருக்க வேண்டாம். அலுவலங்களில் லிப்ட் பயன்படுத்தாமல், படிக்கட்டுகளை பயன்படுத்துங்கள். உங்கள் காரை அலுவலகத்தில் சற்று தொலைவில் இருக்கும் பார்கிங் ஏரியாவில் பார்க் செய்துவிட்டு உங்கள் அலுவலகத்திற்கு நடந்தே செல்லுங்கள்.

நேர இடைவேளை! முதல் மூன்று நாட்களுக்கு 15 – 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். பிறகு நாளுக்கு நாள் மெல்ல, மெல்ல நேரத்தை அதிகரித்து கொள்ளலாம். இது உங்களுக்கும் எளிமையாக பயிற்சி செய்யவும், மாற்றத்தை உணரவும் ஏதுவாக இருக்கும்.

06 1496743095 1

Related posts

தெரிந்து கொள்ளுங்கள்! அளவுக்கு அதிகமான தூக்கம் ஆரோக்கியமற்றது: ஏன்?

nathan

மலச்சிக்கலை தீர்க்கும் அற்புத இயற்கை குறிப்புகள்

nathan

சூப்பர் டிப்ஸ்! காலையில் எழுந்த உடன் இதை குடிக்காதிங்க!

nathan

சிவப்பு நிற இறைச்சி சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்!

nathan

கர்ப்பகாலத்தில் குமட்டல், காலை நோயை தடுக்க வைட்டமின் பி6 மாத்திரை உதவுமா..

nathan

இந்த 6 ராசிக்காரங்களுக்கு பயம்னா என்னனே தெரியாதாம்… தெரிந்துகொள்வோமா?

nathan

ரொம்ப ஆபத்து??சாப்பிட்டபின் இந்த தவறை மறந்தும் செய்யாதீர்கள்!

nathan

வாழ்நாள் முழுக்க சந்தோசமாக இருக்க வேண்டுமா? உறவில் அன்யோன்யம் அதிகரிக்க…

nathan

பெண்களே நாற்பது வயதில் நகத்தைப் பாருங்கள்

nathan