30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
greentea 11 1512968864
ஆரோக்கிய உணவு

இந்த ஒரு டம்ளர் டீ, 10 டம்ளர் க்ரீன் டீக்கு சமம் தெரியுமா?படிங்க…

ஒவ்வொருவருக்கும் தங்களது உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை இருக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க காய்கறிகள், பழங்கள் மற்றும் சில பானங்களை அன்றாட உணவில் சேர்த்து வருகின்றனர். சரி, ஜப்பானிய மக்கள் பிட்டாகவும், நீண்ட நாட்கள் இளமையுடனும் இருப்பதற்கு எது காரணம் என்று தெரியுமா? அவர்களது உணவுப் பழக்கம் தான். ஜப்பானியர்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க அன்றாட உணவில் காய்கறிகள், பழங்கள் மற்றும் மீன்களை சேர்த்து வருகின்றனர். அதோடு பால் டீயை விட, க்ரீன் டீயைத் தான் எப்போதும் குடிப்பார்கள்.

அதிலும் க்ரீன் டீயின் ஒரு வகையான மட்சா க்ரீன் டீயைத் தான் அதிகம் குடிப்பார்கள். இந்த டீயின் இலைகள் நிழலில் வளரும் தேயிலைகளால் தயாரிக்கப்படுகிறது. இதன் வளரும் முறை மற்றும் அறுவடை செய்யும் முறையினால், மட்சா க்ரீன் டீ சாதாரண க்ரீன் டீயை விட அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. அதாவது ஒரு கப் மட்சா க்ரீன் டீயானது 10 கப் சாதாரண க்ரீன் டீக்கு சமமான சத்துக்களைக் கொண்டது. ஆகவே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், இந்த டீயை தினமும் ஒரு கப் குடித்து வர, குறைந்த காலத்திலேயே உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். சரி, இப்போது மட்சா க்ரீன் டீயின் ஆரோக்கிய நன்மைகளைக் காண்போம்.

நன்மை #1 மட்சா க்ரீன் டீ, உடலில் வெப்பத்தை உற்பத்தி செய்து, மெட்டபாலிச அளவை அதிகரித்து, விரைவில் கொழுப்புக்களைக் கரைக்க உதவி, வேகமாக உடல் எடையைக் குறைக்க உதவும்.

நன்மை #2 மற்ற டீயை விட மட்சா க்ரீன் டீயில் குளோரோஃபில் அதிகளவில் உள்ளது. குளோரோஃபில்லுக்கு கடுமையான உலோகங்கள், நச்சுகள், டையாக்ஸின்கள், நஞ்சுகள் மற்றும் ஹார்மோன் இடையூறு ஆகியவற்றை அகற்றும் திறன் உள்ளது. இதனால் இந்த டீயை ஒரு கப் குடிக்க உடல் சுத்தமாகும்.

நன்மை #3 மிசிஸிபி பல்கலைகழகம் இதுக்குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் மட்சா க்ரீன் டீயில் உள்ள வலிமையான ஆன்டி-ஆக்ஸிடன்ட், மார்பக புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுப்பது கண்டறியப்பட்டது.

நன்மை #4 மட்சா க்ரீன் டீயில் கேட்டசின்கள் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், சக்தி வாய்ந்த ஆன்டி-ஏஜிங் ஏஜென்ட் போன்று செயல்பட்டு, முதுமைத் தோற்றத்தைத் தடுக்கும். இந்த டீயில் மற்ற க்ரீன் டீயை விட 13-க்கும் அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது.

நன்மை #5 மட்சா க்ரீன் டீயில் உள்ள தனிப்பட்ட அமினோ அமிலங்கள், எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் உடலின் ஆற்றத்தை உடனடியாக அதிகரிப்பதோடு, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கச் செய்யும். எனவே சோம்பேறியின்றி சுறுசுறுப்பாக இருக்க, இந்த வகை க்ரீன் டீயை குடியுங்கள்.

நன்மை #6 இந்த வகை க்ரீன் டீ மனதை ஒருமுகப்படுத்தும் திறனை அதிகரிப்பதோடு, நினைவாற்றலையும் அதிகரிக்கும். இதற்கு அதில் உள்ள L-தியனைன் அமினோ அமிலங்கள் தான் காரணம். அதோடு, இந்த டீ செரடோனின் அளவை அதிகரித்து, மனநிலையை சந்தோஷமாக வைத்துக் கொள்ளும்.

நன்மை #7 மட்சா க்ரீன் டீயில் உள்ள அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ப்ளேவோனாய்டுகள், கேட்டசின்கள் மற்றும் பாலிஃபீனால்கள், உடலை வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களிடமிருந்து பாதுகாக்கும். எனவே ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்க, இந்த டீயை தினமும் ஒரு கப் குடியுங்கள்.

நன்மை #8 மட்சா க்ரீன் டீயில் உடலால் எளிதில் உறிஞ்சக்கூடியவாறான டயட்டரி நார்ச்சத்துக்கள் உள்ளன. இது உடலில் இரத்த சர்க்கரை அளவை சீரான அளவில் பராமரிக்க உதவுவதோடு, மலச்சிக்கலில் இருந்து விடுபடவும் உதவும்

நன்மை #9 மட்சா க்ரீன் டீயில் உள்ள அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட், இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்து, இரத்தம் உறைவதைத் தடுக்கும். இதனால் உடலில் இரத்தம் தங்கு தடையின்றி உடல் முழுவதும் பாய்ந்தோடுவதோடு, இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.

நன்மை #10 வாய் துர்நாற்றம் உள்ளவர்கள், இந்த வகை டீயை ஒரு கப் குடித்தால், அதில் உள்ள வலிமையான ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் கிருமிகள், பாக்டீரியாக்களை அழித்து, பற்களின் எனாமலைப் பாதுகாத்து, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும். அதற்கு இந்த டீயை குடிக்கலாம் அல்லது டூத் பேஸ்ட்டுடன் கலந்து பயன்படுத்தலாம் அல்லது மௌத் வாஷாகவும் பயன்படுத்தலாம்.

நன்மை #11 உடலினுள் இருக்கும் உட்காயங்களை விரைவில் சரிசெய்ய வேண்டுமானால், மட்சா க்ரீன் டீயை ஒரு கப் குடியுங்கள். இதனால் அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் காயங்களை விரைவில் போக்கும்.

greentea 11 1512968864

Related posts

சூப்பர் டிப்ஸ்! சர்க்கரை வியாதியை முற்றிலும் குணமாகும் பாதாம் பருப்பு !

nathan

உங்களுக்கு தெரியுமா உடலுக்கு அதிகளவு சக்தியை தரும் கொள்ளுவை பற்றி!

nathan

மூளைக்கு சுறுசுறுப்பு தரும்!

nathan

கோடையில் தர்பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்

nathan

ஆய்வில் தகவல்! கிரீன் டீயில் கொரோனாவை எதிர்க்கும் மருத்துவ குணங்கள்

nathan

உங்களுக்கு உலர்திராட்சை சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா?

nathan

பாதம் பருப்பை விட இந்த பருப்பிற்கு இப்படி ஒரு சக்தியா..?

nathan

வாய்வு பிரச்சனையை ஏற்படுத்தும் உணவுகள்!!!

nathan

சீதாபழத்தில் இவ்வளவு நன்மை இருக்கா?தெரிஞ்சிக்கங்க…

nathan