30.2 C
Chennai
Tuesday, Aug 26, 2025
06 1509964560 1
ஆரோக்கிய உணவு

மாதவிடாய் காலத்தில் நீங்க இதை கண்டிப்பா சாப்பிடவே கூடாது!

மாதவிடாய் சுழற்சி பொதுவாகவே பெண்களுக்கு மிகவும் எரிச்சலூட்டுவதாகவும், சோர்வடையச் செய்வதாகவும் மற்றும் வெறுப்பூட்டுவதாகவும் இருக்கின்றன. இதன் காரணமாக ஏற்படும் மன அழுத்தம், கோபம் மற்றும் பயம் போன்ற உணர்வுகளையும் கூட வரச் செய்யும்.
மாதவிடாய் காலங்களில் வலி, மோசமான உடல்நிலை, துர்நாற்றம் போன்ற விஷயங்களையும் பலரும் எதிர்கொள்கிறார்கள். அதுவும் முதல் இரண்டு நாட்களில் யாருமே தங்களுடைய தினசரி வேலைகளை செய்ய முடியாதவாறு வலியை அனுபவிப்பார்கள்.

பெண்களுக்கு மாதவிடாய் காலம் என்பது ஒரு முக்கியமான காலகட்டமாகும். இந்த மாதவிடாய் தான் பெண்களின் கர்ப்பப்பையின் ஆரோக்கியத்தை பற்றி தெரியப்படுத்தும் ஒன்றாக உள்ளது. இந்த காலகட்டத்தில் பெண்கள் இரும்புச்சத்து மிகுந்த உணவுகள், வைட்டமின் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான ஒன்றாகும். அதே சமயத்தில் சில வகையான உணவுகளை சாப்பிடாமல் இருப்பதே சிறந்ததாகும். அப்படி எந்த உணவுகளை மாதவிடாய் காலத்தில் சாப்பிட கூடாது என்பதை பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

டயட்
மாதவிடாய் காலத்தில் சில உணவுகளை சாப்பிடுவதால் மனநிலை மாற்றம், சோகம் போன்றவை உண்டாகலாம். அல்லது உதிரப்போக்கு அதிகமாகவோ அல்லது உடல் வலியோ உண்டாகலாம். எனவே தான் சில வகையான உணவுகளை மாதவிடாய் காலத்தில் தவிர்ப்பது நல்லது. சிவப்பு மிளகு, ஸ்டிராபெர்ரி, சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது.

சுத்திகரிக்கப்பட்ட உணவுகள் இயற்கையான பொருட்களை உண்பது உடலுக்கு நல்லது. ஆனால் அதுவே சுத்திகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை மாதவிடாய் காலத்தில் உட்க்கொள்வது என்பது கூடாது. பல சுத்திகரிக்கப்பட்ட உணவுகளில் மறைமுகமாக சர்க்கரை கலந்துள்ளது. இது மனமாற்றம், சோகமாக காணப்படுவது போன்ற பிரச்சனைகளைக்கு காரணமாக அமைந்து விடும்.

தவிர்க்க வேண்டியவை வெள்ளை பிரட், பாஸ்தா, பாக்கெட் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவை, கேக் போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை மாதவிடாய் காலத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லதாகும்.

கொழுப்பு உணவுகள் கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் எண்ணெய்யில் வறுக்கப்பட்ட உணவுகளை மாதவிடாய் காலத்தில் எடுத்துக் கொள்வது என்பது கூடாது. இதில் உள்ள கொழுப்புகள் உங்களுக்கு மார்பகத்தில் வலி, வயிற்று போக்கு, உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளை தரலாம். எனவே முடிந்தவரை இது போன்ற உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

சாப்பிட கூடாது நன்றாக பொரிக்கப்பட்ட உணவுகளான வெங்காய சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், டோ நட்ஸ், பேக் செய்யப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், கொழுப்பு மிகுந்த இறைச்சி, சீஸ், கொழுப்பு மிகுந்த பால் பொருட்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

உப்பு நிறைந்த உணவுகள் உங்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிகமாக வயிற்றுப்போக்கு உண்டானால், நீங்கள் உணவில் அதிகமாக உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டியது அவசியமாகும். அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள் உப்பு சேர்த்து செய்யப்பட்ட நட்ஸ், ஸ்நேக்ஸ், ஊறுகாய், புகையால் சமைக்கப்பட்ட உணவுகள், பாட்டிலில் அடைக்கப்பட்ட உணவுகள், சீஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டியது அவசியம்.

இனிப்பு உணவுகள் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு கோபம், வெறுப்பு, விரக்தி போன்றவை உண்டாகும். இனிப்பு உணவுகளை எடுத்துக் கொள்வது மாதவிடாய் காலத்தில் இது போன்ற உணர்ச்சிகளை அதிகரிக்கும். எனவே இது போன்ற உணவுகளை மாதவிடாய் காலத்தில் தவிர்ப்பது நல்லது.

இது வேண்டாம் மிட்டாய், சோடா, இனிப்பு உள்ள பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்ப்பானங்கள், ஸ்வீட்ஸ், கேட், குக்கீஸ் போன்ற உணவுகளை மாதவிடாய் காலத்தில் தவிர்ப்பதன் மூலமாக எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கலாம்.

ஆல்கஹால் ஆல்கஹால் பருகுவது என்பது மாதவிடாய் காலத்தில் உள்ள வலியை அதிகரிக்க செய்யும். மேலும் ஆல்கஹால் பருகுவதால் மாதவிடாய் காலத்தில் ஓய்வு எடுக்க முடியாமல் போகும். இது உடலுக்கு அதிக சோர்வை உண்டாக்கும்.

சிவப்பு இறைச்சி கொழுப்பு நிறைந்த ரெட் மீட் ஆனது உடலுக்கு கெடு விளைவிக்க கூடியதாகும். இதனை மாதவிடாய் காலத்தில் சாப்பிடுவதால் உடல் வலி உண்டாகும். நீங்கள் மாமிசம் சாப்பிட விரும்புவராக இருந்தால், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த சால்மன் அல்லது டூனா போன்ற மீன் வகைகளை சாப்பிடுவது நல்லது.

காஃபின் மாதவிடாய் காலத்தில் ஒரு காபி அல்லது டீ குடித்துவிட்டு வேலையை பார்ப்பது என்பது உங்களை நாள் முழுவதும் களைப்பு இல்லாமல் செயல்பட வைக்க உதவும். ஆனால் அதே சமயம் இந்த காஃபின் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக உங்களுக்கு மன மாற்றம், சோர்வு, கோபம், மன அழுத்தம் போன்றவை உண்டாகு

காஃபின் உணவுகள் காபி, டீ, காஃபின் உள்ள உணவுகள், எனர்ஜியை கொடுக்கும் பானங்கள், சாக்லேட் போன்றவற்றில் காஃபின் நிறைந்திருப்பதால், இதனை மாதவிடாய் காலத்தில் சாப்பிடும் போது உங்களுக்கு மன அழுத்தம் உண்டாகும். எனவே காபி பருக வேண்டும் என தோன்றினால் ஒருமுறை மட்டும் வேண்டுமானால் பருகலாம். இரவு தூங்க போகும் முன்னர் காஃபின் பொருட்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டியது அவசியம்.06 1509964560 1

Related posts

வேர்க்கடலை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்

nathan

பாதாமை பச்சையாக சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்னாகும்னு தெரியுமா?இத படிங்க

nathan

ஆற்றலை தரும் வெஜிடபிள் ஊத்தாப்பம்

nathan

அவசியம் படிக்கவும் ! அன்றாட உணவில் கருப்பு உப்பு சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா…?

nathan

அன்னாசிப்பழம் மூலம் கிடைக்கும் நன்மைகள் – Health benefits of pineapple

nathan

கீரைகளும் மருத்துவப் பயன்களும் 40 வகை

nathan

ஆரோக்கியத்தைத் தரும் கொத்தமல்லி தோசை

nathan

சூப்பரான டிப்ஸ்! அடிக்கடி உணவுக்கு பயன்படுத்தும் மாவை நீண்ட காலம் கெடாமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

nathan

15 பாடிகாட்ஸ்! உச்சி முதல் உள்ளங்கால் வரை…

nathan