25.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
1495784856 1654
சிற்றுண்டி வகைகள்

வாழைப்பூ கட்லெட் செய்ய தெரிந்து கொள்ள வேண்டுமா…?

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ – 1
உருளைக்கிழங்கு – 2
மைதா – 2 தேக்கரண்டி
கடலை மாவு – 5 தேக்கரண்டி,
பெரிய வெங்காயம் – 2
பச்சைமிளகாய் – 6
மிளகுத்தூள் – 1 மேசைக்கரண்டி
சீரகம் – 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவையானது

செய்முறை:

வாழைப்பூவை சுத்தம் செய்து நறிக்கி தண்ணீரில் போடுவதற்கு பதிலாக மோரில் போட்டு வைத்தால், கருத்து போவதை தடுக்கலாம். வாழைப்பூவை பொடியாக நறுக்கி ஆவியில் வேகவைத்து எடுத்து ஆறவைக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.

வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கு, வாழைப்பூ, மைதா, வெங்காயம், ப.மிளகாய், கடலைமாவு, மிளகுத்தூள், கறிவேப்பிலை, சீரகம் முதலியவற்றுடன் அளவாக உப்பையும் போட்டு எல்லாவற்றையும் நன்றாகப் பிசைந்து கொள்ளவும். மாவில் தண்ணீர் சேர்க்க கூடாது. மாவு தளர்வாகி விட்டால் சிறிது கடலை மாவை சேர்த்து கொள்ளலாம். மாவை சிறு சிறு உருண்டைகளாகச் செய்து கொள்ள வேண்டும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்துள்ள மாவை வேண்டிய வடிவில் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். சுவையான வாழைப்பூ கட்லெட் ரெடி.1495784856 1654

Related posts

மீல்மேக்கர் வடை

nathan

கேழ்வரகு கொழுக்கட்டை

nathan

பிரட் பீட்ரூட் பால்ஸ்

nathan

லசாக்னே

nathan

கோதுமை – சிவப்பு அவல் சப்பாத்தி

nathan

சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ்

nathan

சில்லி சப்பாத்தி / Chilli Chapathi

nathan

மிக்ஸ்டு வெஜிடபிள் & ஓட்ஸ் உப்புமா

nathan

காய்கறி பரோத்தா (சில்லி பரோட்டா)

nathan