img1130928023 1 1
சிற்றுண்டி வகைகள்

சத்தான கேழ்வரகு இட்லி

இது சூப்பரான சத்தான கேழ்வரகு இட்லி. அரிசி இட்லியினை விட இந்த இட்லி மிகவும் பஞ்சு போல மென்மையாக இருக்கும். கேழ்வரகில் அதிக அளவு கால்சியம்(Calcium) இருக்கின்றது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் அவசியம்.

கேழ்வரகில் அதிக அளவு நார்சத்து(Dietary Fiber), புரோட்டின்(Protein) காணப்படுகின்றது. டயபெட்டிக், வயதனாவர்களுக்கு எற்ற உணவு.

தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு – 2 கப்
உளுத்தம் பருப்பு – 3/4 கப்
உப்பு – 1 தே.கரண்டி

கேழ்வரகு இட்லி செய்முறை :

உளுத்தம் பருப்பினை குறைந்தது 1 மணி நேரமாவது ஊறவைக்கவும். ஊறவைத்த உளுத்தம் பருப்பினை, இட்லிக்கு அரைப்பது போல மைய அரைத்து கொள்ளவும். கேழ்வரகு மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்.

கரைத்து வைத்த கேழ்வரகு மாவுடன் உப்பு + அரைத்த உளுத்தம் மாவினை சேர்த்து நன்றாக இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்.( மிகவும் தண்ணீயாக கரைத்துவிட வேண்டாம்.) இதனை குறைந்தது 6 – 8 மணி நேரம் வைத்து புளிக்கவிடவும். ( இந்த மாவுக் புளிக்க , அரிசி மாவினை விட கொஞ்சம் நேரம் எடுக்கும்.)img1130928023 1 1

Related posts

மரவள்ளிக் கிழங்கு புட்டு செய்வது எப்படி

nathan

வாயுத்தொல்லையை நீங்கும் இஞ்சி பிரண்டை துவையல்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் சிப்ஸ்

nathan

குரக்கன் ரொட்டி

nathan

எளிமையாக செய்யக்கூடிய புல்கா ரொட்டி

nathan

லசாக்னே

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை ரவை இட்லி

nathan

நெய் அப்பம்

nathan

சத்தான சிவப்பரிசி – கேரட் புட்டு

nathan