30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
சிற்றுண்டி வகைகள்

வாழைப்பூ கட்லெட் செய்ய தெரிந்து கொள்ள வேண்டுமா…?

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ – 1
உருளைக்கிழங்கு – 2
மைதா – 2 தேக்கரண்டி
கடலை மாவு – 5 தேக்கரண்டி,
பெரிய வெங்காயம் – 2
பச்சைமிளகாய் – 6
மிளகுத்தூள் – 1 மேசைக்கரண்டி
சீரகம் – 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவையானது

செய்முறை:

வாழைப்பூவை சுத்தம் செய்து நறிக்கி தண்ணீரில் போடுவதற்கு பதிலாக மோரில் போட்டு வைத்தால், கருத்து போவதை தடுக்கலாம். வாழைப்பூவை பொடியாக நறுக்கி ஆவியில் வேகவைத்து எடுத்து ஆறவைக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.

வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கு, வாழைப்பூ, மைதா, வெங்காயம், ப.மிளகாய், கடலைமாவு, மிளகுத்தூள், கறிவேப்பிலை, சீரகம் முதலியவற்றுடன் அளவாக உப்பையும் போட்டு எல்லாவற்றையும் நன்றாகப் பிசைந்து கொள்ளவும். மாவில் தண்ணீர் சேர்க்க கூடாது. மாவு தளர்வாகி விட்டால் சிறிது கடலை மாவை சேர்த்து கொள்ளலாம். மாவை சிறு சிறு உருண்டைகளாகச் செய்து கொள்ள வேண்டும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்துள்ள மாவை வேண்டிய வடிவில் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். சுவையான வாழைப்பூ கட்லெட் ரெடி.

Related posts

இனிப்புச்சீடை

nathan

கடலைப்பருப்பு ஸ்வீட் போண்டா

nathan

கம்பு தயிர் வடை

nathan

பொங்கல் ஸ்பெஷல்: சர்க்கரை பொங்கல்

nathan

சத்தான கேரட் – கேழ்வரகு ஊத்தப்பம்

nathan

கடலைப்பருப்பு ஸ்வீட் கேசரி

nathan

அதிரசம் என்ன அதிசயம்?

nathan

பூரண பூரி : செய்முறைகளுடன்…!

nathan

டபுள் டெக்கர் பரோட்டா

nathan