25.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
14 1442223731 6 water
ஆரோக்கியம் குறிப்புகள்

தினமும் எந்தெந்த நேரத்தில் எல்லாம் மறக்காமல் தண்ணீர் குடிக்க வேண்டுமென்று தெரியுமா?

தண்ணீர் இல்லாமல் மனிதன் உயிர் வாழவே முடியாது. ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தினமும் தண்ணீர் குடிப்பது என்பது மிகவும் அவசியமானது. ஆனால் அத்தகைய தண்ணீரை ஒருசில செயல்களுக்கு முன்னர் குடிப்பது என்பது முக்கியம். ஏனெனில் அந்நேரங்களில் தண்ணீர் குடிப்பதால், பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

அதே சமயம் தண்ணீரை அளவுக்கு அதிகமாகவும் குடிக்கக்கூடாது. சரி, எவ்வளவு தண்ணீர் தான் குடிக்க வேண்டும் என்று கேட்கிறீர்களா? ஆண்கள் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீரையும், பெண்கள் 2.5 லிட்டர் தண்ணீரையும் குடிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இந்த தண்ணீரை சரியான நேரங்களில் குடித்து வந்தால், இன்னும் சிறந்த பலன்களைப் பெறலாம்.

சரி, இப்போது தினமும் எந்தெந்த நேரங்களில் தண்ணீர் குடித்தால் என்னென்ன நன்மை கிடைக்கும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து பின்பற்றி பயனடையுங்கள்.

டீக்கு முன் காபி மற்றும் டீயில் pH அளவானது 5 மற்றும் 6 ஆக உள்ளது. இவை உடலில் அசிடிட்டியின் அளவை அதிகரித்து, அல்சரை ஏற்படுத்தும். ஆனால் டீ அல்லது காபி குடிப்பதற்கு முன் 1 டம்ளர் தண்ணீர் குடித்தால், இப்பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

குளிப்பதற்கு முன் குளிப்பதற்கு முன் 1 டம்ளர் தண்ணீர் குடிப்பதால், இரத்த அழுத்தம் குறையும். ஆனால் சுடுநீரில் குளிக்கும் முன் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

காலையில் எழுந்த பின் காலையில் எழுந்த உடன், முகத்தைக் கழுவியப் பின் 2 டம்ளர் தண்ணீர் குடிப்பதால், உடலுறுப்புக்கள் சீராக செயல்பட ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, உடலில் தேங்கியுள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறும்.

உணவிற்கு முன் ஒவ்வொரு முறை உணவு உண்ணும் 1/2 மணிநேரத்திற்கு முன்பும் 1 டம்ளர் தண்ணீர் குடித்தால், செரிமானம் சீராக நடைபெறுவதோடு, உண்ணும் உணவின் அளவு குறைந்து, உடல் எடையையும் குறைக்கலாம்.

படுக்கைக்கு முன் தினமும் இரவில் படுப்பதற்கு முன் 1 டம்ளர் தண்ணீர் குடிப்பதால், பக்கவாதம் அல்லது மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

உடற்பயிற்சிக்கு முன் மற்றும் பின் உடற்பயிற்சிக்கு முன் மற்றும் பின் தண்ணீர் குடிப்பதால், உடற்பயிற்சியினால் வறட்சியடைந்த உடலுறுப்புக்கள் ஈரப்பதமூட்டப்பட்டு, சுறுசுறுப்புடன் செயல்பட உதவும்.

14 1442223731 6 water

Related posts

இந்த 5 ராசிக்காரங்களோட பொறாமைக்கு அளவே இல்லையாம்…

nathan

சிவப்பு நிற இறைச்சி சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்!

nathan

தண்ணீரை சேமித்து வைக்க நீங்கள் பிளாஸ்டிக் மற்றும் எவர் சில்வரை பயன்படுத்துவது சரியா?

nathan

மண்பானையில் நீங்க சமைச்சா… இந்த அதிசயம் நடக்குமாம்… தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

ஆண்மை அதிகரிக்க பனங்கற்கண்டின் நன்மைகள்!…

sangika

மாம்பழம் ஒரு அழகுசாதன பொருளா?தெரிஞ்சிக்கங்க…

nathan

உட்கார்ந்தபடியே அதிக நேரம் வேலை பார்ப்பவரா நீங்கள்? கட்டாயம் இத வாசியுங்கள்!…

sangika

uric acid meaning in tamil – உரிக் ஆசிட்

nathan

கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய காய்கறி மற்றும் பழங்கள்! தெரிஞ்சிக்கங்க…

nathan