23.9 C
Chennai
Thursday, Nov 20, 2025
16
ஆரோக்கிய உணவு

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் 10 உணவுகள்…!

உங்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் இருக்கிறது என்றால், நீங்கள் என்ன சாப்பிடுகின்றீர்களோ, அதன் மூலமே ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க முடியும். பசியோடு இருக்க வேண்டியது இல்லை… நீண்ட நேரத்துக்கு வயிறு நிறைந்த உணர்வை இது தரும்.
சர்க்கரை நோய் என்றால், உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பை விட அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். பாலீஷ் செய்யப்பட்ட அரிசி உணவுகள், மைதா உள்ளிட்ட]உணவுகள் ]ரத்தத்தில் கார்போஹைட்ரேட் அளவை உடனடியாக அதிகரிக்கச் செய்துவிடும். ஆனால், சில உணவுகள், உணவு பழக்கம் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவும். அவ்வகை உணவுகள், சர்க்கரை நோயாளிகளுக்காக…

16

பாகற்காய்: பாகற்காயில், கீரையைவிட அதிக அளவு கால்சியமும் இரும்புச்சத்தும் போதுமான அளவு பீட்டாகரோட்டினும் உள்ளன. பாகற்காய், இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி, உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. தினசரி காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு அருந்திவர, சர்க்கரைநோய் கட்டுப்படும்.

17

மஞ்சள்:மஞ்சளில் குர்குமின் (Curcumin) என்ற வேதிப்பொருள் நிறைந்துள்ளது. கணையத்தில் உள்ள திசுவினுள் ‘மேக்ரோபேஜ்’ (Macrophage) எனும் தற்காப்பு செல்கள் நுழைந்து, ‘சைட்டோகைன்ஸ்’ என்ற அழற்சியை உருவாக்கும் புரதத்தைச் சுரப்பதால் இன்சுலினை உற்பத்திசெய்யும் செல்கள் சேதமடைகின்றன. குர்குமின் இதைத் தடுத்து, இன்சுலின் சுரப்பை மேம்படுத்துவதால், டைப் 2 சர்க்கரைநோய் கட்டுப்படுத்தப்படுகிறது.

18

நார்ச்சத்து அதிகம் உணவு: நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்கள், இரைப்பை, சிறுகுடலில் கார்போஹைட்ரேட் குளுக்கோஸாக மாற்றப்படுவதின் வேகத்தைக் குறைக்கின்றது. இதனால், உடலில் அதிக அளவு சர்க்கரை மற்றும் கொழுப்பு சேர்வது தடுக்கப்படுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைகிறது. எனவே, நார்ச்சத்து நிறைந்த கீரைகள், பச்சை நிற காய்கறிகள், பூண்டு, கேரட், வெள்ளரி, முட்டைக்கோஸ், புரோகோலி, தக்காளி, பீன்ஸ், வெண்டைக்காய், காலிஃபிளவர், ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி, எலுமிச்சை, நாவல்பழம், கொய்யா ஆகியவற்றை தேவையான அளவு எடுத்துக்கொள்ளலாம்.

19

பட்டை: பட்டை, வளர்சிதை மாற்றத்தின் மூலமாக உடலில் வெப்பத்தை உருவாக்கும். இதனால், உடலில் உள்ள தேவையற்றகொழுப்புகரைகிறது. பட்டை நம் உடலில் இயற்கையாகவே சுரக்கும் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும். டைப்-2 சர்க்கரை நோயாளிகள் பட்டையை உட்கொண்டால், ரத்த சர்க்கரையின் அளவை சமநிலைப்படுத்தும்.

20

நட்ஸ்: நட்ஸில், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. இதில் உள்ள நல்ல கொழுப்பு, உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்றிவிடுவதால், உடலில் நல்ல கொழுப்பு நிறைந்து, இதயத்தின்ஆரோக்கியம்மேம்படுகிறது. இன்சுலின் சுரப்பும் சீராகிறது. சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்துகிறது.

21

சிட்ரஸ் பழங்கள்: சிட்ரஸ் நிறைந்த பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவற்றில், வைட்டமின் சி அதிகம் உள்ளன. இது, சர்க்கரைநோயைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உடலில் உள்ள காயம் விரைவில் ஆற உதவுகிறது. எலும்பு முறிவுகள் விரைவில் குணமாகும். நோய்த்தொற்றைத் தடுக்கும். உடல் அசதியைக் குறைத்து, உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தரும்.
கிரீன் டீ: கிரீன் டீயில் உள்ள உயர்தர ஆன்டிஆக்ஸிடன்ட்கள்முதுமையை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல் செல்களைக் கட்டுப்படுத்தி, உடலில் உள்ள ஒவ்வொரு செல்லையும் சுறுசுறுப்பாக்குகிறது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதனால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் வருகிறது.

22

பீன்ஸ் வகைகள்:பீன்ஸ் வகைகளில் அதிக அளவு நார்ச்சத்து, புரோட்டீன், பொட்டாசியம், மக்னீசியம் நிறைந்துள்ளன. இவை, உடலுக்குத் தேவையான ஆற்றலை அளித்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன. இது, செரிமானத்தை சீராக்கி, ரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

23

வெந்தயம்: வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச் சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். இவற்றில் இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயமின், நிகோட்டின் அமிலங்களும் நிறைந்து உள்ளன. அவை உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன், உடலை சமநிலையில் வைக்கவும் வெந்தயம் பயன்படுகிறது. வெந்தயத்தில் உள்ள வைட்டமின் ஏ சர்க்கரைநோயால் ஏற்படும்பார்வை இழப்பை தடுக்கிறது.

24

நாவல் பழம்: நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்ற தாதுக்கள் நிறைந்து உள்ளன. நாவல் பழத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ளஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும். நாவல் பழக் கொட்டைகளை பொடியாக தினசரி சூடான நீருடன் சேர்த்து குடித்துவரச் சர்க்கரைநோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். சர்க்கரை நோய் கட்டுப்படும். நாவல் கொட்டை சூரணம் கணையத்தை பலப்படுத்தி அதன் சுரப்பை சீராக்குகிறது.

Related posts

red rice in tamil – சிவப்பு அரிசியின் அற்புதம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு தவறாமல் கொடுக்க வேண்டிய உணவுகள்!!!

nathan

கோதுமையை விட சிறந்த வரகு அரிசி

nathan

உங்களுக்கு தெரியுமா தைராய்டு வியாதிக்கு இனி மருந்து மாத்திரை தேவையில்லை…. இதை சாப்பிட்டாலே போதும்!!

nathan

குளிர்காலத்தில் உலர்ந்த பழங்களை சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன என கூறப்படுகிறது. அது எந்த அளவிற்கு உண்மை தெரியுமா?

nathan

சத்தான கேழ்வரகு இடியாப்பம் செய்முறை விளக்கம்

nathan

மிக்ஸ்டு வெஜிடபிள் ஜூஸ் !

nathan

Tips.. பலாப்பழ பிரியர்கள் இதனை படிக்கவும்..

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உடல் எடையை குறைக்க, சர்க்கரை நோயை போக்க இது போதும்!

nathan