vIl27UW
சூப் வகைகள்

மணத்தக்காளி முளைகட்டிய பயறு சூப்

என்னென்ன தேவை?

மணத்தக்காளிக் கீரை 75 கிராம்,
முளைகட்டிய பயறு 75 கிராம்,
தக்காளி 2,
வெங்காயம் 2,
பச்சை மிளகாய் 3,
கறிவேப்பிலை சிறிது,
உப்பு தேவைக்கேற்ப,
சீரகம் 1 டீஸ்பூன்,
பூண்டு 4 பல்,
பெருங்காயம் 1 சிட்டிகை,
எண்ணெய் 5 மி.லி.,
கொத்தமல்லித் தழை சிறிது.

எப்படிச் செய்வது?

மணத்தக்காளிக் கீரையை அலசி, பொடியாக நறுக்கவும். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். இரும்புக் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, கறிவேப்பிலை சேர்க்கவும். பிறகு முளைகட்டிய பயறும், கீரையும் சேர்க்கவும். அடுத்து தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, பெருங்காயம் சேர்த்துக் கொதிக்க விடவும். கீரை நன்கு வேகும் வரை கொதிக்க விட்டு இறக்கி, உப்பு, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்vIl27UW“/>

Related posts

தால் சூப்

nathan

மக்காரோனி சூப்

nathan

பத்து நிமிட காய்கறி சூப்

nathan

பிடிகருணை சூப்

nathan

தக்காளி சூப்

nathan

தக்காளி பேசில் சூப்

nathan

வீட்டிலேயே செய்யலாம் சூப்பரான ரசப்பொடி

nathan

நீரிழிவு நோயை குணப்படுத்த இந்த சூப்பை குடித்தால் போதும்……

sangika

கேரட், சோயா சூப்

nathan