28.9 C
Chennai
Monday, May 20, 2024
201701181122012825 how to make beetroot soup SECVPF
சூப் வகைகள்

சத்தான சுவையான பீட்ரூட் சூப்

பீட்ரூட்டை பொரியலாகவோ, கூட்டாகவோ சாப்பிடப் பிடிக்காதவர்கள் சூப் தயாரித்து அருந்தலாம். இப்போது பீட்ரூட் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான சுவையான பீட்ரூட் சூப்
தேவையான பொருட்கள் :

பீட்ரூட் – 1/4 கிலோ
தக்காளி – 3
பெரிய வெங்காயம் – 1
வெண்ணெய் – 25 கிராம்
மிளகுத்தூள் – தேவையான அளவு
கரம்மசால் பொடி – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சோளா மாவு – 2 டீஸ்பூன்
கிரீம் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 3 கப்

செய்முறை :

* பீட்ரூட்டை தோல் சீவி துருவியால் துருவிக் கொள்ளவும்.

* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சோளா மாவை அரை கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.

* குக்கரில் 3 கப் தண்ணீர் ஊற்றி நறுக்கிய வெங்காயம், தக்காளி, பீட்ரூட்டை போட்டு அத்துடன் மிளகுத்தூள், உப்பு, கரம்மசால் பொடி, வெண்ணெய் சேர்த்து 2 விசில் போட்டு வேக விடவும். வெந்ததும் மசித்து வடிகட்டிக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய பீட்ரூட் சாறுடன் கரைத்து வைத்துள்ள சோளமாவு கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

* நன்றாக கொதிக்கும் போது அத்துடன் 1 டீஸ்பூன் கிரீம் சேர்க்கவும்.

* சூப்பரான பீட்ரூட் சூப் ரெடி.

* பிரெட் துண்டுகளை நெய்யில் வறுத்து சூடான கப்பில் போட்டு பரிமாறவும். 201701181122012825 how to make beetroot soup SECVPF

Related posts

உடல் பலவீனமானவர்கள் வலுசேர்க்கும் மட்டன் எலும்பு சூப்

nathan

மீனை வைத்து எளிய முறையில் சூப்பரான சூப் செய்வது எப்படி என்று பார்க்க்லாம்.

nathan

சுவையான சத்தான பேபி கார்ன் சூப்

nathan

கேரட்  - இஞ்சி சூப்

nathan

இனிப்பு சோளம் சூப்

nathan

புரோகோலி – வால்நட் சூப்! ஈஸி குக்!

nathan

சுவையான சத்தான வாழைத்தண்டு சூப்

nathan

தக்காளி சூப்

nathan

முருங்கை இலை சூப்

nathan