27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
201701120950366534 Ladyfinger treating abdominal affliction SECVPF 1
ஆரோக்கிய உணவு

வயிற்று உபாதைகளை குணப்படுத்தும் வெண்டைக்காய்

மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்த கூடியது. மேலும் இதன் மருத்துவ பயன்களை விரிவாக பார்க்கலாம்.

வயிற்று உபாதைகளை குணப்படுத்தும் வெண்டைக்காய்
வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் கணக்கு நன்றாகப் போடலாம் என்று சொல்லிச் சொல்லியே குழந்தைகளுக்கு ஊட்டும் அம்மாக்களை பார்த்துள்ளோம்.

வெண்டைக் காய்க்கும் அறிவு வளர்ச்சிக்கும் நேரடி தொடர்பு இருக்கிறதோ இல்லையோ இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரழிவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான போலிக் அமிலம் வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது. கர்ப்பத்தில் உள்ள குழந்தையானது உள்ளே நல்லபடியாக வளரவும் முதல் ட்ரைமெஸ்டரின் போதான குழந்தையின் நரம்பு குழாய்களின் வளர்ச்சிக்கும் இந்த போலிக் அமிலமானது மிகவும் அவசியம்.

வெண்டைக்காயின் சிறப்பே அதன் கொழகொழப்புத் தன்மைத்தான். ஆனால் அந்தக் கொழகொழப்பு பிடிக்காமலே பலரும் அதை சேர்த்துக் கொள்ளவதில்லை. உண்மையிலே அந்த வழவழப்புத் தன்மையில்தான் வெண்டைக்காயின் அத்தனை மருத்துவப் பலன்களும் மறைந்துள்ளன.

இந்த வழவழப்பில் உள்ள நார்ச்சத்து அல்சர் பாதித்தவர்களுக்கு அருமருந்து. தவிர மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்த கூடியது.

நோய் எதிர்ப்பாற்றல் அதிகமுள்ள வெண்டைக்காய் சிறந்த உடல்நல ஊக்கி என்றே சொல்லாம். இதிலுள்ள கரையும் நார்ச்சத்தானது கொல்ஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுவதன் மூலம் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்தை குறைக்கின்றது.201701120950366534 Ladyfinger treating abdominal affliction SECVPF

Related posts

உங்களுக்கு தெரியுமா தேனை எந்தெந்த ஜூஸில் கலந்து குடிச்சா என்னென்ன நோய்கள் தீரும் தெரியுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…உபயோகித்த சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தலாமா?

nathan

உங்களுக்கு தெரியுமா உடல் எடையை குறையவும், அதிகரிக்கவும் எந்த வகை வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும்?

nathan

சூப்பரான சைனீஸ் ஸ்டைல் கார்லிக் சிக்கன்

nathan

உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் அற்புத உணவுகள்!!!

nathan

சுவையான மணத்தக்காளி வத்தல் குழம்பு

nathan

தெரிஞ்சிக்கங்க…பெண்கள் அதிகமாக குளிர்பானங்களை பருகுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

nathan

உணவே மருந்தாகும்… உடற்பயிற்சியே துணையாகும்!

nathan

ஆண்மைக் குறைவை நீக்கும் சுப்பர் மருந்து!!

nathan