1
ஆரோக்கியம் குறிப்புகள்

வெஜ் வான்டன் சூப்

தேவையானவை: மைதா – 30 கிராம், கேரட் – 20 கிராம், பீன்ஸ் – 10 கிராம், வெங்காயம் – 5 கிராம், செலரி (கொத்தமல்லி போன்றது – டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – 2 கிராம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு – தலா 5 கிராம், பச்சை மிளகாய் – ஒன்று, சோயா சாஸ் – 2 மில்லி, அஜினோமோட்டோ (விரும்பினால்) – சிறிதளவு, ஸ்பிரிங் ஆனியன் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பொடியாக நறுக்கிய வெங்காயம், பீன்ஸ், இஞ்சி, பச்சை மிளகாய், பாதி அளவு கேரட், பூண்டு மற்றும் சோயா சாஸ், செலரி, சிறிதளவு உப்பு ஆகியவற்றை எண்ணெயில் நன்கு வதக்கிக்கொள்ளவும். மைதாவை சமோசா மாவு பதத்துக்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும். வதக்கியவற்றை மைதாவினுள் வைத்து சமோசா செய்வது போல் செய்து, இட்லி பானையில் ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அது கிரீடம் போன்ற வடிவில் இருக்க வேண்டும். இப்போது வான்டன் தயார்.

கடாயில் எண்ணெய் ஊற்றி மீதமுள்ள பூண்டு, கேரட், சேர்த்து வதங்கியதும் தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி வந்தவுடன், தயார் செய்து வைத்துள்ள வான்டனை போட்டு, தேவையான உப்பு சேர்த்து, (விரும்பினால்) அஜினோமோட்டோ சேர்த்து இறக்கி, நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.
1

Related posts

முதுமையில் இளமை சாத்தியமா?

nathan

உங்களுக்கு தெரியுமா சர்க்கரை நோயாளிகள் மக்காச்சோளம் ஏன் சாப்பிடக்கூடாது..!

nathan

உங்களுக்கு டைம்க்கு பீரியட்ஸ் ஆகலையா? அப்படின்னா இதை செஞ்சிப் பாருங்க..

nathan

தெரிஞ்சிக்கங்க… உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என கண்டறிவது எப்படி?

nathan

இந்த மாதிரியான உணவுகளை பச்சையாக சாப்பிடக் கூடாதாம்!…

sangika

வயிற்றுப்போக்கு உடனே நிற்க வீட்டு வைத்தியம்

nathan

பெண்களுக்கு முதுகு வலி வர முக்கிய காரணம் சமையலறை

nathan

உங்களுக்கு தெரியுமா தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் பெறும் நன்மைகள்!!!

nathan

நம் கோபத்தை கட்டுபடுத்த 13 எளிய வழிகள்

nathan