33.7 C
Chennai
Wednesday, Jul 30, 2025
201610211106015580 Foods to prevent bone deterioration osteoporosis SECVPF
ஆரோக்கிய உணவு

எலும்பு தேய்மானத்தை தடுக்கும் உணவுகள்

நமது உடலின் தேய்மானத்தை தடுக்க கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். அவை என்னவென்று கீழே பார்க்கலாம்.

எலும்பு தேய்மானத்தை தடுக்கும் உணவுகள்
அதிக புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உடலில் அமிலத்தன்மையை அதிகரிக்கும். அதனால் எலும்புகள் வலுவை இழக்கும். உணவில் சேரும் அதிகப்படியான உப்பும் எலும்பின் வலிமைக்கு எதிராக அமையும்.

உடலில் உப்பு அதிகமாகும் போது அதிகப்படியான உப்பு சிறுநீருடன் வெளியேறும். அப்பொழுது அதனுடன் கால்சியமும் தாதுவும் வெளியேறிவிடும். அதனால் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சாஸ், அப்பளம், ஊறுகாய், வறுவல் மற்றும் நொறுக்குதீனியை குறைத்து சாப்பிட வேண்டும்.

பாஸ்போரிக் அமிலம் உள்ள குளிர்ப்பானங்கள், கால்சியம் சத்துக்களை அழிக்கும் தன்மை உள்ளவை. எனவே காபி, டீ போன்ற பானங்களை நாம் அதிகமாக குடிப்பதால், நம் உடம்பில் உள்ள கால்சியம் குறைவதற்கு காரணமாக உள்ளது.

பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 400 மிலி. பால் அருந்த வேண்டும். வயதானவர்களுக்கு பால் அதிகம் ஜீரணமாவதில்லை.

அவர்கள் கால்சியம் சத்துகள் நிறைந்த காய்கறிகள், கீரைகள் மற்றும் சிறு தானியங்களை உண்ணலாம். காய்கறிகளில் பீட்ரூட், வெண்டைக்காய், முருங்கைகாய், சுண்டைக்காய், தாமரைத்தண்டு போன்றவற்றில் கால்சியம் அபரிமிதமாக உள்ளது.

அகத்திகீரை, முருங்கைகரை, அரைக்கீரை, பசலைக்கீரை, கறிவேப்பிலை, தண்டுக்கீரை, குப்பைமேனி மற்றும் வெற்றிலையில் அதிகம் கால்சியம் உள்ளது.

எள், கால்சியம் சத்துக்கள் நிறைந்தது. எனவே எள்ளை வெல்லம் உருண்டைகளாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

இரண்டு எள்ளு உருண்டையில் 1400 மி.கி. கால்சியம் உள்ளது. எள்ளை பொடியாக செய்து உணவுடன் சாப்பிடலாம். தினமும் 5 பாதம் பருப்புகளை ஊற வைத்து அரைத்து, அதை பாலுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

கேழ்வரகில் பாலை விடை அதிக கால்சியம் உள்ளது. குழந்தைகளுக்கு கேழ்வரகு மாவில் முருங்கை கீரை கலந்து அடையாக செய்து கொடுக்கலாம். இது கால்சியம் சத்துள்ள முழுமையான சிற்றுண்டி. பெரியவர்கள் கஞ்சி அல்லது கூழாக செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

எலும்பு தேய்மானத்துக்கு மிக அருமையான உவு மருந்து பிரண்டை என்னும் கொடி, பிரண்டை எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது. இணைப்பு திசுக்களை விரைவில் வளரவும் உதவுகின்றது.

சிறந்த வலி நிவாரணியாகவும், வலி, வீக்கத்தை குறைக்கும் தன்மையுடையதாகவும் உள்ளது. உடைந்த எலும்புகளை எளிதில் சேர்க்கும் தன்மையும் இதற்கு உண்டு. பிரண்டையை துவையலாக செய்து தினம் இரண்டு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வரலாம்.201610211106015580 Foods to prevent bone deterioration osteoporosis SECVPF

Related posts

கோவைக்காய்! முள் வேலியில் வளர்ந்து கிடப்பதில் இவ்ளோ பவரா?

nathan

உங்களுக்கு தெரியுமா பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் என்று?

nathan

தெரிஞ்சிக்கங்க…இந்த ‘ஒரு பொருள்’ இருந்தால், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை உடனடியாக போக்கலாம் தெரியுமா?

nathan

சூப்பரான குடைமிளகாய் புலாவ்

nathan

கோடைகாலத்தில் உடல் நலனை பாதுகாக்க செய்ய வேண்டியவை

nathan

ஹஜ் பெருநாள் ஸ்பெஷல்:சுவையான மட்டன் ‘தம்’ பிரியாணி செய்முறை!

nathan

மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் முட்டைகோஸ் ரொட்டி

nathan

கைக் குலுக்குறது கூட குத்தமா…??? கை எடுத்து கும்பிடுங்க அது தான் சரி!!!

nathan

30 நாட்கள் இஞ்சியை எடுத்துக்கொண்டால் நடக்கும் அற்புதம்-தெரிஞ்சிக்கங்க…

nathan