perikkaai
ஆரோக்கிய உணவு

குடல் புற்றுநோய்க்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாகும் பேரிக்காய்

பேரிக்காயில் உடலிற்கு வலிமையளிக்கக் கூடிய நார்சத்துப் பொருட்கள், நோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி உள்ளன. 100 கிராம் பழத்தில் 3.1 கிராம் நார்ப் பொருட்கள் காணப்படுகின்றன. பேரிக்காயில் உள்ள நார்ப் பொருட்கள் குடல் புற்றுநோய்க்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக பயன்படுகின்றன.
குடல் புற்றுநோய்க்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாகும் பேரிக்காய்
இதில் காணப்படும் எளிதில் கரையாத பாலிசாக்ரைடு மூலக்கூறுகள் குடலில் சேரும் புற்று நோய் நச்சுகளை அகற்றவல்லது. 100 கிராம் பழத்துண்டில் 58 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. இவற்றை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை, கொழுப்பின் அளவு கட்டுக்குள் இருக்கும். அதிக அளவிலான வைட்டமின் சி சத்துப்பொருட்கள் பேரிக்காயில் நிறைந்து உள்ளன.
புதிதாக பறித்த 100 கிராம் பழத்தில் 7 சதவீதத்திற்கு வைட்டமின் சி காணப்படுகிறது. பேரிக்காயில் பீட்டா கரோட்டீன், லுட்டின் மற்றும் ஸிசான்தின் போன்ற சத்துப் பொருட்களும் காணப்படுகின்றன. இவை உடலுக்கு வலிமை அளிப்பதுடன், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாகவும் செயல்படுகின்றன. தாமிரம், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாது உப்புகள் பேரிக்காயில் கணிசமாக உள்ளன. இவை தவிர பி குழும வைட்டமின்களான பைரிடாக்சின், ரிபோபிளேவின் மற்றும் போலேட் போன்றவையும் மிகுதியாக காணப்படுகின்றன.
perikkaai

Related posts

பழங்களை கொண்டாடுவோம்! துரித உணவை மறப்போம்… .

nathan

பருத்தி பால் தீமைகள்

nathan

30 வகை ரெடி டு ஈட்

nathan

உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றணுமா? பெண்களே…. இதோ எளிய நிவாரணம்

nathan

உணவு வழக்கத்தில் மாற்றங்களை பின்பற்றுவதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும்

nathan

உங்களுக்கு தெரியுமா தினம் ஒரு கிவி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

நீரிழிவு நோயாளிகள் குக்கர் சாதத்தினை சாப்பிட்டால் என்ன நடக்கும்? தெரிஞ்சிக்கங்க…

nathan

கருவாடு சாப்பிடுவது நல்லது தானாம்; தெரிஞ்சிக்கங்க…

nathan

பூசணி விதையின் நன்மைகள் (Poosani Vithai Benefits in Tamil)

nathan