31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு தேவையான ஊட்டசத்து உணவுகள்

இன்றைய சூழலில் பெண்கள் தங்கள் குடும்பத்தையும் கவனித்து கொண்டு, வேலைக்குச் செல்லும் நிலையில் பல உடல் ரீதியான தொந்தரவுக்கு ஆளாக நேரிடுகின்றனர்.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு தேவையான ஊட்டசத்து உணவுகள்
பொதுவாக பெண்களுக்கு இயற்கையாகவே மாதவிலக்கு சுழற்சியின் காரணமாக பலவகையான சத்துக்குறைபாடுகள் உண்டாகிறது. இத்தகைய சத்துக் குறைபாட்டால் உடல் பலவீனமடைந்து பாதிப்படைகிறது. இதனால் பெண்களுக்கு கூடுதல் ஊட்டசத்து தேவைப்படுகிறது.

நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் பெண்களுக்கு பருவம் எய்தியவுடன் வீட்டில் இருக்க வைத்து உடலுக்கு வலு கொடுக்கும் உணவுகளைக் கொடுத்து, மாதவிலக்கு காலங்களில் போதிய ஓய்வும் கொடுத்து வந்தனர். ஆனால், இன்றைய சூழலில் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு ஓய்வு என்பது கிடையாது. மேலும் உணவு தயாரித்து அதை சாப்பிடக்கூட நேரமில்லாமல் அவசர அவசரமாக கிளம்பி பயணத்தின் போதே சாப்பிடுகின்றனர், அல்லது பட்டினி கிடக்கின்றனர்.

மேலும் மாதவிலக்கு காலங்களில் 3 அல்லது 5 நாட்கள் தனியாக அமர வைத்து, எந்த வேலையும் செய்யவிடாமல், ஓய்வு கொடுத்தனர். அதை நாம் தவறாக புரிந்து கொண்டுள்ளோம். அந்த காலங்களில் போதிய ஓய்வு தேவை என்பதாலேதான் அவ்வாறு செய்தனர் என்பதனை உணரவேண்டும்.

போதிய சத்து குறைப்பாட்டால் குடலில் புண், பித்தம், அஜீரணம், தலைவலி, கை, கால் வலி, இடுப்பு, முதுகு வலி போன்றவற்றை ஏற்படுத்துகிறது. மேலும் உடல் அசைவில்லாமல் கணனி முன் அதிக நேரம் அமர்ந்திருந்து வேலை பார்ப்பவர்கள் இரவுப் பணி, குறைவான தூக்கம், மன அழுத்தம் இவைகளாலும் பெண்களின் உடல் பாதிப்படைகிறது. இத்தகைய பாதிப்புகள் பின்னாளில் பெரிய நோய்களாக மாறிவிடும்.

இத்தகைய உடல் பிரச்சனைகளில் இருந்து விடுபட இவர்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு எடுத்து கொள்வது அவசியமாகும். அதற்காக ஊட்டச்சத்து மாத்திரைகளை வாங்கி உண்பது நல்லதல்ல. அவை உடலுக்குத் தீங்கிழைக்கக் கூடியவையாக உள்ளது.

நம்முடைய அன்றாட உணவில் கீரைகள், காய்கள் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பலபேர்களின் பிரச்சனைகளில் ஒன்று சிறுநீரை அடக்குவது அல்லது சிறுநீர் கழிவதைத் தடுக்க தண்ணீர் அருந்தாமல் இருப்பது போன்றவற்றை தவிர்த்து நன்கு நீர் அருந்த வேண்டும். முளை கட்டிய பயறு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

Related posts

உடல் உறுதிக்கு உதவும் 10 பருப்புகள் மற்றும் நட்ஸ்!

nathan

நீண்ட வாழ்வு தரும் உணவுப் பழக்கம்

nathan

பச்சை பட்டாணி சூப்

nathan

மீந்து போன சாதத்தில் சூப்பரான மொறு மொறு ஸ்நாக்ஸ்…

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவு! பிஸ்தாவின் மருத்துவ பலன்கள்

nathan

மஞ்சள் தூள் அன்றாட உணவில் சேரும்போது கிடைக்கும் நன்மை!….

sangika

சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற சூப்பர் டிப்ஸ்

nathan

இந்த விதையை ஒரு கையளவு சாப்பிட்டா, உடல் எடை வேகமா குறைஞ்சிடும் தெரியுமா?

nathan

கலப்பட பொருட்களை அறிந்து கொள்ளுங்கள்

nathan