31.3 C
Chennai
Sunday, Jul 12, 2026
ஆரோக்கிய உணவு

ஆரோக்கியம் தரும் வெந்தய குழம்பு செய்ய…!

தேவையான பொருட்கள்:

வெந்தயம் – 4 தேக்கரண்டி
வரமிளகாய் – 4
மல்லி – 3 தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 8 பல்
புளி – ஒரு எலுமிச்சம்பழ அளவு
தேங்காய் துருவல் – அரை கப்
கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். வரமிளகாய், மல்லி, சீரகம் இவை மூன்றையும் வறுத்து அரைக்கவும். தேங்காயை தனியாக அரைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் 6 தேக்கரண்டி ஊற்றி காய வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும். ஊற வைத்த வெந்தயத்தை வடிகட்டி வாணலியில் போட்டு வதக்கவும். வதங்கியதும் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

அரைத்து வைத்திருக்கும் மிளகாய் விழுதினை போட்டு வதக்கவும். பிறகு அரைத்து வைத்திருக்கும் தேங்காயை சேர்க்கவும். புளியை கரைத்து ஊற்றி உப்பு சேர்க்கவும். அடுப்பை குறைத்து வைத்து கொதிக்கவிடவும். எண்ணெய் தெளிந்தது மேலே வந்தவுடன் இறக்கவும்.

Related posts

பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் இவ்வளவு தீமையா? தெரிஞ்சிக்கங்க…

nathan

சரும பொலிவுக்கு பப்பாளி – ஆரஞ்சு ஜூஸ்

nathan

தெரிஞ்சிக்கங்க…நீரிழிவு பாதிப்பை குறைக்க உதவும் உணவு முறைகள் என்ன….?

nathan

பெண்களின் நோய் தீர்க்கும் கீரைத்தண்டு!

nathan

டயட்டில் இருப்போருக்கான… ஓட்ஸ் உப்புமா

nathan

பித்த வாந்திக்கு நிவாரணம் தரும் நார்த்தங்காய் இலை துவையல்

nathan

சர்க்கரை வள்ளிக் கிழங்கு சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?அப்ப இத படிங்க!

nathan

தெரிந்துகொள்வோமா? இளநீரில் தேன் கலந்து குடித்தால் என்ன அற்புதம் நடக்கும்ன்னு தெரியுமா?

nathan

மாம்பழங்கள் இயற்கையாகப் பழுத்தவையா அல்லது செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்டவையா என்று எப்படிக் கண்டறிவது?

sangika