பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு பொரி சாட் மசாலா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
மாலை நேர ஸ்நாக்ஸ் பொரி சாட் மசாலா
தேவையான பொருட்கள் :
பொரி – 1 கப்
ஓமப் பொடி 1 கப்
வெங்காயம், தக்காளி தலா – 1
கொத்தமல்லித் தழை – சிறிதளவு
சாட் மசலா – 1 டீஸ்பூன்
சாட் மசாலா செய்ய :
சீரகம், தனியா, மாங்காய்த் தூள் – தலா கால் கப்
கருப்பு உப்பு, மிளகு – தலா அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 8
செய்முறை :
* சாட் மசாலா செய்யக் கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் நன்றாக வெயிலில் காயவைத்து அரைத்தெடுத்தால் சாட் மசலா தயார்.
* தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் பொரியை போட்டு அதனுடன் சாட் மசாலா, ஓமப் பொடி, வெங்காயம், தக்காளி, கொத்தமல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
* சூப்பரான பொரி சாட் மசாலா தயார்.
* இதை சாப்பிடும் போது தான் செய்ய வேண்டும். முதலிலேயே செய்து வைத்து விட்டால் நமத்து விடும்.