உடல் சூடு, சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் இந்த ஜூஸை குடித்து வரலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
உடல் சூட்டை தணிக்கும் கற்றாழை ஜூஸ்
தேவையான பொருட்கள் :
சுத்தம் செய்த கற்றாழை சதை – 100 கிராம்
நெல்லிக்காய் – 2
பனங்கற்கண்டு – 25 கிராம்
செய்முறை :
* கற்றாழையின் மேல் தோல் நீக்கி உள்ளிருக்கும் சதையை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அந்த சதையை ஏழு முறை தண்ணீர் விட்டு அலசி பயன்படுத்த வேண்டும்.
* சுத்தம் செய்த கற்றாழை, நெல்லிக்காய், பனங்கற்கண்டு இவைகளை கலந்து நீர் விட்டு மிக்சியில் போட்டு அரைத்து ஜூஸ் ஆக குடிக்க வேண்டும்.
* இது வெப்பத்தை தணியும். உடல் வறட்சி நீங்கும். நீர் எரிச்சல் நீங்கும் இப்படிப்பட்ட கற்றாழையை நாம் மூன்று அல்லது இரண்டு நாளைக்கு ஒரு முறைப்பயன்படுத்தலாம். மோருடன் கலந்து குடிக்கலாம். வெட்டை நோய்க்கு நல்லது.