நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. நெல்லிக்காய் ஜூஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி தரும் நெல்லிக்காய் ஜூஸ்
தேவையான பொருட்கள் :
நெல்லிக்காய் – 6
எலுமிச்சை சிறியது – 1,
தேன் – தேவையான அளவு,
இஞ்சி – சிறிதளவு,
ஐஸ் கியூப்ஸ் – தேவைக்கு
செய்முறை:
* நெல்லிக்காயில் உள்ள விதைகளை நீக்கி விட்டு சிறுசிறு துண்டுகளாக வெட்டி, எலுமிச்சைச்சாறு, தேன், இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
* பின்னர் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் ஒருமுறை மிக்சியில் சுற்றவும்.
* அரைத்த ஜூஸை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி தேன், ஐஸ் கியூப்ஸ் சேர்த்து நன்றாக கலந்து பருகவும்.
பலன்கள்:
நெல்லிக்காய் வைட்டமின் சி நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், செரிமான மண்டலத்துக்கு மிகவும் நல்லது.
சளிப்பிடிக்கும் என நினைப்பவர்கள், மஞ்சள் தூள் சேர்த்து இந்த ஜூஸ் அருந்தலாம். குழந்தைகளுக்குத் தேன் சேர்த்துக் கொடுக்கலாம்.