33.3 C
Chennai
Saturday, May 18, 2024
KnwHdli
செட்டிநாட்டுச் சமையல்

செட்டிநாடு காலிஃப்ளவர் சூப்

என்னென்ன தேவை?

சிறிய காலிஃப்ளவர் பூ – 1,
துவரம் பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்,
மிளகு – 10,
பூண்டு – 5 பல்,
சின்ன வெங்காயம் – 7,
தக்காளி – 1,
சோம்பு அல்லது சீரகத் தூள் – 1/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,
பச்சை மிளகாய் – 1,
சீரகம் – 1/4 டீஸ்பூன்,
பிரிஞ்சி இலை – 1.

எப்படிச் செய்வது?

சின்ன வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காலிஃப்ளவரை வெந்நீரில் போட்டு எடுத்து வைக்கவும். துவரம் பருப்பை குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்து, சீரகம், பச்சை மிளகாய், மிளகு, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும். அதில் வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கவும். பிறகு காலிஃப்ளவரை சேர்க்கவும்.

ஒரு வதக்கு வதக்கி 2 கப் தண்ணீர், பூண்டு, மஞ்சள் தூளும் சேர்த்துக் கொதிக்க விடவும். காலிஃப்ளவர் நன்கு வெந்தவுடன் அதில் வெந்த பருப்பை சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும். அத்துடன் உப்பு, சோம்பு அல்லது சீரகத் தூள் சேர்த்து 2 கொதி வந்தவுடன் கறி வேப்பிலை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சூடாகப் பரிமாறவும். KnwHdli

Related posts

செட்டிநாடு காளான் மசாலா

nathan

செட்டிநாடு மட்டன் குருமா செய்முறை விளக்கம்

nathan

செட்டிநாடு ஸ்டைல் வெண்டைக்காய் மண்டி

nathan

செட்டிநாடு காளான் கிரேவி

nathan

சூப்பரான செட்டிநாடு கோவக்காய் மசாலா

nathan

செட்டிநாடு இறால் சுக்கா

nathan

செட்டிநாட்டு சமையல் கவுனி அரிசி இனிப்பு

nathan

செட்டிநாடு பால் பணியாரம்

nathan

சுவையான செட்டிநாடு பூண்டு ரசம்

nathan