35.8 C
Chennai
Wednesday, Jul 30, 2025
201612051033348139 Chettinad Vellai Paniyaram SECVPF
செட்டிநாட்டுச் சமையல்

செட்டிநாடு வெள்ளை பணியாரம் செய்வது எப்படி

இந்த வெள்ளை பணியாரத்தை செய்வது மிகவும் சுலபம். மாலையில் சூடாக சாப்பிட சுவையான வெள்ளை பணியாரம் செய்து எப்படி என்று பார்க்கலாம்.

செட்டிநாடு வெள்ளை பணியாரம் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

பச்சரிசி – ஒரு கப்,
உளுந்து – 4 டேபிள்ஸ்பூன்,
நெய் – 2 டீஸ்பூன்,
சர்க்கரை – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* அரிசி, உளுந்தை சேர்த்து சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊறவிடவும்.

* நன்றாக ஊறிய பிறகு உப்பு, சர்க்கரை சேர்த்து நைஸாக அரைக்கவும் (தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்).

* வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் வட்ட வடிவ அகலக் கரண்டியால் மாவை ஊற்றவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேகவிடவும். இதை ஒவ்வொன்றாகத்தான் செய்ய வேண்டும்.

* சுவையான செட்டிநாடு வெள்ளை பணியாரம் ரெடி.

குறிப்பு: மாவு புளிக்கக் கூடாது. அரைத்த 10 நிமிடத்தில் செய்யவும். இதற்கு கார சட்னி சூப்பர் காம்பினேஷன்!201612051033348139 Chettinad Vellai Paniyaram SECVPF

Related posts

சூப்பரான ஸ்நாக்ஸ் செட்டிநாடு பால் பணியாரம்

nathan

செட்டிநாடு புளிக்குழம்பு

nathan

செட்டிநாடு மட்டன் குழம்பு விரிவான செய்முறை

nathan

செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு காரக்குழம்பு -செய்முறை

nathan

செட்டிநாடு காலிஃப்ளவர் சூப்

nathan

செட்டிநாடு உப்பு கறி செய்முறை விளக்கம் chettinad samayal kurippu

nathan

சிக்கன் செட்டிநாடு

nathan

செட்டிநாடு இறால் சுக்கா

nathan

செட்டிநாட்டு பட்டாணி மசாலாப் பொரியல்

nathan