28.9 C
Chennai
Monday, May 20, 2024
செட்டிநாட்டுச் சமையல்

செட்டிநாடு புளிக்குழம்பு

13 1436772483 chettinad puli kulambu

செட்டிநாடு ரெசிபிக்களில் பல உள்ளன. அதில் ஒன்றான செட்டிநாடு புளிக்குழம்பின் செய்முறையை தமிழ் போல்ட் ஸ்கை இங்கு கொடுத்துள்ளது. இந்த ரெசிபி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் இந்த புளிக்குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பாக இதனை 2 நாட்கள் கூட வைத்து சாப்பிடலாம். சரி, இப்போது அந்த செட்டிநாடு புளிக்குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் – 1/2 கப் (தோலுரித்தது)
பூண்டு – 10 பல் (தோலுரித்தது)
தக்காளி – 2 (நறுக்கியது)
புளி – 1 எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி – 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
வடகம் – சிறிது
சோம்பு – 1/4 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, பின் சாம்பார் பொடி சேர்த்து பிரட்டி விட வேண்டும்.

அடுத்து அதில் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், செட்டிநாடு புளிக்குழம்பு ரெடி!!!

Related posts

செட்டிநாடு சிக்கன் கிரேவி

nathan

செட்டிநாடு மீன் பிரியாணி,tamil samayal tips

nathan

செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை

nathan

சுவையான செட்டிநாடு பூண்டு ரசம்

nathan

சூப்பரான செட்டிநாடு காளான் மசாலா

nathan

சுவையான செட்டிநாடு வத்த குழம்பு

nathan

செட்டிநாடு உப்பு கறி செய்முறை விளக்கம் chettinad samayal kurippu

nathan

செட்டிநாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட்

nathan

சூப்பரான செட்டிநாடு ஸ்பெஷல் பன்னீர் மசாலா

nathan