27.7 C
Chennai
Thursday, Jul 17, 2025
201605241034504921 how to make aloo chapati SECVPF
சிற்றுண்டி வகைகள்

சுவையான ஆலு சப்பாத்தி செய்வது எப்படி

சுவையான சுவையான ஆலு சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சுவையான ஆலு சப்பாத்தி செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 2 கப்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – சிறிதளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் – 3
உருளைக்கிழங்கு – 2 பெரியது
கரம்மசாலாத்தூள்- சிறிதளவு

செய்முறை :

* பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* உருளைக்கிழங்கைத் நன்றாக வேகவைத்து மசித்து அதனுடன் உப்பு, சீரகம், பச்சைமிளகாயை, கரம் மசாலாத்தூளைச் சேர்க்கவும்.

* கோதுமை மாவுடன் உருளைக்கிழங்கு மசாலாவைச் சேர்த்துத் தண்ணீர் ஊற்றி மாவு பதத்தில் பிசைந்து அரை மணிநேரம் வைக்கவும்.

* மாவை சப்பாத்திகளாக உருட்டி வைக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் உருட்டி வைத்துள்ள சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

* சுவையான ஆலு சப்பாத்தி ரெடி.

* காரமும், மசாலாப் பொருட்களும் அவரவர் விருப்பத்திற்கேற்பக் கூட்டியும் குறைத்தும் செய்யலாம்.

* காரம் கூடி விட்டதென்றால் எலுமிச்சைச்சாறு அல்லது தயிர் சேர்க்க காரம் மட்டுப்படும்.201605241034504921 how to make aloo chapati SECVPF

Related posts

உடலுக்கு பலம் தரும் – கம்பு தோசை

nathan

தயிர் மசாலா இட்லி

nathan

சூப்பரான ஜவ்வரிசி வெங்காய ஊத்தப்பம்

nathan

திபாவளி ஸ்பெஷல் – சர்க்கரைப் பொங்கல்!

nathan

பிடி கொழுக்கட்டை

nathan

மொறு மொறுப்பான பன்னீர் ஃபிங்கர்ஸ்

nathan

சுவையான சத்தான பாலக் சப்பாத்தி

nathan

மாலை நேர டிபன் இடியாப்ப பிரியாணி

nathan

இட்லி 65

nathan