29.1 C
Chennai
Sunday, Aug 10, 2025
21 61ad2
சிற்றுண்டி வகைகள்

மொறு மொறு அச்சு முறுக்கு செய்வது எப்படி…?

சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு முறுக்கு.

இதனை கடையில் வாங்குவதை விட வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்று சுவையான அச்சு முறுக்கு செய்வது எப்படி என்று பாப்போம்.

 

தேவையான பொருட்கள்
அரிசி மாவு – 1 கப்
மைதா மாவு – 1/4 கப்
சர்க்கரை – 1/4 கப்
தேங்காய் பால் – 3/4 கப்
உப்பு – தேவையான அளவு
வெண்ணிலா எசன்ஸ் – 1/4 தேக்கரண்டி

செய்முறை
துருவிய தேங்காய் பூவை 1/2 கப் வெதுவெதுப்பான நீர் சேர்த்து அரைத்து பால் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அரிசி மாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். அதில் சர்க்கரை தேங்காய் பால் சேர்த்து கரைக்கவும்.

எசன்ஸ் சேர்த்து கலக்கவும். தோசை மாவு போல கெட்டியாக கரைக்கவும். மாவு அச்சில் எடுத்தால் சொட்டாமல் இருக்க வேண்டும். எண்ணெய்யை காயவைத்து அதில் முறுக்கு அச்சை அதில் வைத்து சூடாக்கவும்.

 

கரைத்த மாவில் அச்சை 3/4 பாகம் மட்டும் நனைத்து சூடான எண்ணெய்யில் விட்டு லேசாக அசைக்க வேண்டும். முறுக்கு அச்சிலிருந்து பிரிந்து பொன்னிறமாக வரும். பிறகு எண்ணெய்யை வடித்து எடுக்கவேண்டும்.

சுவையான அச்சு முறுக்கு தயார்.

 

Related posts

சிறு பருப்பு முறுக்கு

nathan

சுவையான… பாசுந்தி ரெசிபி

nathan

சுவையான மொறு மொறு சமோசா சாட்

nathan

கோஸ் பரோத்தா செய்வது எப்படி

nathan

மும்பை ஸ்பெஷல் தவா புலாவ் செய்வது எப்படி

nathan

கார்ர பெண்டலம் பிட்டு

nathan

உடனடி நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி

nathan

ராம் லட்டு

nathan

கேழ்வரகு புட்டு

nathan