28.6 C
Chennai
Monday, May 20, 2024
201610190746446765 wheat flour puttu SECVPF
சிற்றுண்டி வகைகள்

வயதானவர்களுக்கான கோதுமை மாவு புட்டு

வயதானவர்கள், நீரழிவு நோயாளிகள் இந்த கோதுமை புட்டை அடிக்கடி செய்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

வயதானவர்களுக்கான கோதுமை மாவு புட்டு
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 200கிராம்
ஏலக்காய் – 3
தேங்காய் – அரை மூடி
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* மாவை சலித்து வாசனை வரும் வரை வறுத்து ஆறவைத்துக் கொள்ளுங்கள்.

* தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ளுங்கள்.

* உப்பை தண்ணீரில் கரைத்து மாவில் தெளித்து உதிரியாகப் பிசையுங்கள். தண்ணீர் அதிகமாக ஊற்றினால் மாவு திரண்டுவிடும். சிறிது சிறிதாக தெளித்துப் பிசைய வேண்டும்.

* புட்டுக் குழாயில் எண்ணெய் தேய்த்து முதலில் தேங்காய் துருவல், அடுத்து கோதுமை மாவு, அடுத்து தேங்காய் துருவல் என மாற்றி மாற்றி வைக்கவும்.

* அடுப்பில் வைத்து 8 முதல் 10 நிமிடங்கள் வேக வைத்து இறக்கி பரிமாறவும்.

* வாழைப்பழம், பப்படம், வேகவைத்த பச்சைப்பயிறு கலந்தும் பிசைந்து சாப்பிடலாம்.

* நீரழிவு நோயாளிகள், வயதானவர்கள், டயட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் இந்த புட்டு மிகவும் நல்லது. சிறியவர்களுக்கு சர்க்கரை சேர்த்து கொடுக்கலாம். 201610190746446765 wheat flour puttu SECVPF

Related posts

சுவையான பொரி விளங்காய் உருண்டை

nathan

சுவையான வெண்டைக்காய் தயிர் பச்சடி

nathan

இறால் நூடுல்ஸ் : செய்முறைகளுடன்…!​

nathan

நவராத்திரி ஸ்பெஷல் நெய் அப்பம்

nathan

மெக்ஸிகன் டா கோஸ் (Mexican Taccos)

nathan

சிறுதானிய போண்டா தினை – சோளம்

nathan

காலிஃப்ளவர் பஜ்ஜி செய்ய தெரியுமா…!

nathan

றுதானிய கார குழிப்பணியாரம்…

nathan

கார்லிக் புரோட்டா

nathan