சிற்றுண்டி வகைகள்

உளுந்து வடை

உளுந்து வடை பரிமாறும் அளவு – 2 நபருக்கு

தேவையான பொருள்கள் –

தோல் உளுந்து அல்லது முழு உளுந்து – 1 கப்
பச்சை மிளகாய் – 2
சின்ன வெங்காயம் – 10
கறிவேப்பிலை – சிறிது
காயம் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை –

தோல் உளுந்தை 5 மணி நேரம் ஊற வைத்து தோலை நீக்கி விட்டு தண்ணீரை நன்கு வடித்து வைத்துக் கொள்ளவும். முழு உளுந்தை உபயோகப்படுத்தினால் அதை 1 மணி நேரம் ஊற வைத்து நன்றாக கழுவி தண்ணீரை நன்கு வடித்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை எல்லாவற்றையும் சிறியதாக நறுக்கி வைக்கவும்.
உளுந்துடன் காயம், உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கிரைண்டரில் போட்டு 20 நிமிடங்கள் வரை அரைத்து எடுத்து வைக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு மட்டுமே தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
அரைத்த மாவோடு நறுக்கிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலையை சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். கையை தண்ணீரில் நனைத்து மாவை ஒரு எலுமிச்சம் பழம் அளவு எடுத்து கையில் வைத்து தட்டி நடுவில் ஒரு துவாரம் போட்டு எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
அல்லது வாழை இலை/ பிளாஸ்டிக் கவரில் எண்ணையை லேசாக தடவி வடைகளை தட்டி ரெடி பண்ணி வைத்துக்கொள்ளவும். எண்ணெய் சூடானதும் ஒவ்வொரு வடையாக எடுத்து போடவும்.
இரு புறமும் திருப்பி போட்டு நன்கு சிவந்தவுடன் எடுத்து டிஸ்யூ பேப்பரில் உலர விடவும். மிதமான சூட்டில் வைத்து வடைகளை சுட்டெடுக்கவும்.

Related posts

சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ்

nathan

முழு தம் காலிஃப்ளவர்

nathan

பட்டர் முறுக்கு செய்வது எப்படி? எச்சில் ஊற வைக்கும் சுவை

nathan

காளான் கொழுக்கட்டை

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் வெஜிடபிள் – சீஸ் சோமாஸ்

nathan

குலோப் ஜாம் எளிமையான செய்முறை

nathan

குழந்தைகளுக்கான சில்லி கார்லிக் நூடுல்ஸ்

nathan

வேர்க்கடலை லட்டு

nathan

சூப்பரான கோதுமை பாஸ்தா

nathan