20Know your health based on blood group
மருத்துவ குறிப்பு

இரத்த பிரிவை வைத்தே உங்கள் ஆரோக்கியத்தை அறியலாம்

நல்ல ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, யோகா என நீங்கள் என்ன செய்து வந்தாலும் உங்களது இரத்த பிரிவை சார்ந்து சில நோய் தொற்றின் தாக்கம் அதிகமாகும். இந்த இரத்த பிரிவினருக்கு தான் இந்த நோய் தாக்கம் ஏற்படும் என்றெல்லாம் இல்லை.

நோய் தொற்று என்பது அவரவர் உடல்நலம் மற்றும் சுற்றுசூழலை பொறுத்தது. ஆயினும், ஏ பிரிவு மற்றும் ஓ பிரிவு இரத்தம் உள்ள நபர்களுக்கு இருதய நோய் பாதிப்பு ஏற்படுகிறது எனில், அதில் ஓ பிரிவினரைவிட ஏ பிரிவினருக்கு அந்த பிரச்சனை அல்லது நோயின் தாக்கம் அதிகமாக ஏற்படும்.

இவ்வாறு உங்கள் உடலுக்கு ஏற்படும் உடல்நல கோளாறுகள் அல்லது சில நோய்களின் தாக்கம் உங்கள் இரத்த பிரிவை பொறுத்து எந்த அளவு உங்கள் உடல்நலத்தை பாதிக்கும் என நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். இதனால் நீங்கள் உங்கள் உடல்நலன் மீது எவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிந்துக் கொள்ளலாம்.

ஏ.பி. இரத்த பிரிவு உள்ளவர்களுக்கு தான் ஞாபக மறதி கோளாறின் தாக்கம் அதிகமாக ஏற்படுகிறதாம். ஏ.பி, இரத்த பிரிவினர்களுக்கு இரத்த கட்டிகள் உருவாவதற்கான வாய்ப்புகளும் மற்ற இரத்த பிரிவினர்களோடு ஓப்பிடுகையில் அதிகமாக இருக்கிறதாம்.

ஏ.பி இரத்த பிரிவினர் கொஞ்சம் உஷாராக தான் இருக்க வேண்டும். வயிற்று புற்றுநோயின் தாக்கம் ஏற்படும் அபாயத்திலும் இவர்கள் தான் முன்னிலையில் இருகின்றனர். மற்றவர்களைவிட வயிற்று புற்றுநோய் தாக்கத்திற்கான வாய்ப்பு இவர்களுக்கு 26% அதிகமாக இருக்கிறதாம். பி மற்றும் ஓ பிரிவினர்களுக்கு 20% வாய்ப்புகள் இருப்பதாய் கூறப்படுகிறது.

ஏ மற்றும் ஏ.பி இரத்த பிரிவினருக்கு அல்சர் சார்ந்த பிரச்சனைகளின் தாக்கம் அதிக பாதிப்பை உண்டாக்குமாம். வயிற்று புற்றுநோயை ஏற்படுத்தும். அதே கிருமியின் தாக்கம் தான் இதற்கு காரணமாய் இருக்கிறது.

ஓ இரத்த பிரிவினர் கொடுத்து வைத்தவர்கள். பெரும்பாலும் அனைவரும் பயப்படும் இதய பாதிப்புகள் இவர்களுக்கு குறைவாக தான் ஏற்படுகிறதாம். ஏ.பி மற்றும் பி பிரிவு இரத்தம் உடையவர்களுக்கு தான் இதய நோய்களின் தாக்கம் அதிகமாய் இருப்பதாய் கூறப்படுகிறது.

ஓ இரத்த பிரிவினர்களுக்கு கணைய புற்றுநோய் பாதிப்பும் ஏற்படும் வாய்ப்பு குறைவாக தான் இருக்கிறது.

இவர்கள் மற்ற பிரிவினர்களை விட 37% குறைவாக தான் ஏற்படுகிறதாம். பெரும்பாலும் ஓ இரத்த பிரிவினர்களுக்கு நோய் தொற்றின் மூலம் ஏற்படும் தாக்கம் குறைவாக தான் இருக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.20Know your health based on blood group

Related posts

வீக்கமடைந்து இரத்த கசிவை ஏற்படுத்தும் ஈறுகளுக்கான சில வீட்டு சிகிச்சைகள்!!!

nathan

சர்க்கரை நோய் தாக்குவதற்கு இதுதான் முக்கிய காரணமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

புற்றுநோய் தவிர்க்கும் வழிமுறைகள்!

nathan

புதினா… மணத்துடன் மருத்துவ குணமும்

nathan

குறைப்பிரசவம் நடக்கப்போகுது என்பதை எப்படி முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்?

nathan

உங்களுக்கு தெரியுமா 26 வகையான நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே சூப்பர் மூலிகை இது மட்டும் தாங்க!

nathan

உங்களுக்கு இவையெல்லாம் புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகள் எனத் தெரியுமா?

nathan

தேமலுக்கு இயற்கை மருத்துவம்

nathan

வெளிநாட்டில் மருத்துவம் படிக்கலாமா?

nathan