30.3 C
Chennai
Tuesday, May 21, 2024
amil 6
மருத்துவ குறிப்பு

பாலூட்டும் தாய்மார் தடுப்பூசி போட்டால் பாதிப்பா?

கொரோனா தடுப்பூசி குறித்து பாலூட்டும் பெண்களுக்கு பல சந்தேகம் நிலவி வருகின்றது.அதில் ஒன்று தான் தடுப்பூசி போட்டால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என்று கேள்வி.

இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பான விளைவுகள் குறித்து ஆய்வு நடத்தி வந்தனர். அதில் அவர்கள் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர். தற்போது அவற்றை பார்ப்போம்.

பாலூட்டும் தாய்மார் போட்டு கொள்ளலாம்?

பாலூட்டும் தாய்மார் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிறபோது, தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி குறிப்பிடத்தக்க அளவுக்கு இருக்கிறது. இது குழந்தைகளை நோயில் இருந்து பாதுகாக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், தடுப்பூசி தாய்மார்களையும், குழந்தைகளையும் பாதுகாக்கும் என்பதால், கர்ப்பிணி பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசி போட இது மற்றொரு கட்டாய காரணம் ஆகிறது.

ஆராய்ச்சி கூறுவது என்ன?

ஆராய்ச்சி நடத்திய புளோரிடா பல்கலைக்கழக பேராசிரியர் ஜோசப் லார்கின் கூறுகையில், தாய்ப்பாலில் கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி குறிப்பிடத்தக்க அளவுக்கு இருக்கிறது என்பதை எங்கள் கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன. இந்த நோய் எதிர்ப்பு சக்தி தாய்ப்பால் குடிக்கிற குழந்தைகளுக்கு செல்கிறது. எனவே அவர்களை பாதுகாக்கிறது என குறிப்பிட்டார்.

Related posts

ஆண்-பெண் குரல் வித்தியாசம்

nathan

பெண்களே தொிந்துகொள்ளுங்கள்! இரண்டாவது முறை கருத்தரிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

nathan

இதை பின்பற்றுங்கள்! மூளையின் ஆரோக்கியத்தை பாதுக்காக்க வேண்டுமா?..

nathan

தனியாக வெளியூர் செல்லும் பெண்களின் கவனத்திற்கு

nathan

மூட்டு வலியை போக்கும் ஆயுர்வேத மூலிகைகள்

nathan

தைராய்டு பிரச்னை… தவிர்க்க வேண்டியதும்… சேர்க்க வேண்டியதும்..!

nathan

உங்களுக்கு கண் அடிக்கடி அரிக்குதா? சூப்பரா பலன் தரும்!!

nathan

வயிறு தொடர்பான புற்றுநோய்களைத் தடுக்கும் வெண்டைக்காய்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முதன் முதலில் குழந்தை பெற்ற பெண்களிடம் சொல்ல கூடாத விஷயங்கள் என்ன தெரியுமா?

nathan