28.6 C
Chennai
Monday, May 20, 2024
frequent urination
மருத்துவ குறிப்பு

அடிக்கடி ‘சுச்சூ’ வருதா? அதைத் தடுக்க இதோ சில வழிகள்!!!

சிலருக்கு அவசரமாக அடிக்கடி சிறுநீர் வருவது போன்று இருக்கும். இந்த நிலையை ஒவ்வொருவரும் தங்களின் வாழ்நாளில் ஒரு கட்டத்தில் கண்டிப்பாக அனுபவிப்போம். இந்த சூழ்நிலையில் அடிவயிற்றில் எரிச்சலுடன், வலியையும் உணரக்கூடும். சரி, இந்த நிலையை எப்படி கண்டுபிடிப்பது என்று கேட்கிறீர்களா? ஒரு நாளைக்கு 4-5 முறை சிறுநீர் கழித்தால் பிரச்சனை இல்லை. ஆனால் 8 முறைக்கு மேல் சிறுநீர் கழிக்க நேர்ந்தால், அப்போது உடலில் பிரச்சனை இருப்பதாக தெரிந்து கொள்ளலாம்.

இந்த நேரத்தில் வாழ்க்கை முறையை கவனிக்க வேண்டும். மேலும் இந்த பிரச்சனை எதற்கு ஏற்படுகிறது எனில், சிறுநீர்ப்பை அதிகளவு வெப்பத்துடன் இருந்தாலோ அல்லது சிறுநீர் பாதையில் ஏதேனும் தொற்றுகள் இருந்தாலோ தான் வரும். மேலும் நீரிழிவு நோயாளிகள் கூட இந்த பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். அதுமட்டுமின்றி, அளவுக்கு அதிகமாக ஆல்கஹால், டீ அல்லது காபி குடித்தாலும் இந்நிலை ஏற்படும்.

ஆகவே இந்த பிரச்சனையைப் போக்க ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. ஒருவேளை இந்த பிரச்சனை முற்றி இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். சரி, இப்போது அடிக்கடி அவசரமாக சிறுநீர் வருவது போன்று உணர்ந்தால், அதைத் தடுக்க உதவும் சில வழிகளைப் பார்ப்போமா!!!

மாதுளை தோல்

அடிக்கடி சிறுநீர் வருவது போன்று உணர்ந்தால், மாதுளையின் தோளை பேஸ்ட் செய்து, அதில் ஒரு சிட்டிகை எடுத்து நீரில் கலந்து குடிக்க வேண்டும். இப்படி 5 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

கொள்ளு

கொள்ளு கூட அடிக்கடி சிறுநீர் வருவதைத் தடுக்கும். ஏனெனில் கொள்ளுவில் கால்சியம், இரும்புச்சத்து, பாலிஃபீனால் மற்றும்

ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. ஆகவே அத்தகைய கொள்ளுவை சிறிது எடுத்து, அதனை வெல்லத்துடன் சேர்த்து கலந்து, தினமும் காலையில் உட்கொண்டு வந்தால், இப்பிரச்சனை நீங்கும்.

எள்

எள்ளுவில் கூட ஆன்டி-ஆக்ஸிடன்ட், கனிமச்சத்து மற்றும் வைட்டமின்கள் வளமையாக உள்ளது. இத்தகைய எள்ளை வெல்லம் அல்லது ஓமத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர, உடனடி நிவாரணத்தைப் பெறலாம்.

தேன் மற்றும் துளசி

தேன் மற்றும் துளசியை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தினமும் சாப்பிட்டு வந்தால், நிச்சயம் அடிக்கடி சிறுநீர் கழிப்பதில் இருந்து விடுபடலாம்.

தயிர்

அன்றாடம் உணவில் தயிர் சேர்த்து வந்தால், தயிரில் உள்ள புரோபயாடிக் சிறுநீர்ப்பையில் உள்ள தீங்கை விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்து, அடிக்கடி சிறுநீர் வருவதைத் தடுக்கும்.

வெந்தயம்

வெந்தயத்தை அப்படியே அல்லது அதனை பொடி செய்து, தேனுடன் கலந்து தினமும் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

நறுமணமிக்க எண்ணெய்கள்

நல்ல நறுமணமிக்க எண்ணெய்களான சந்தன எண்ணெய், டீ-ட்ரீ ஆயில் போன்றவற்றைக் கொண்டு அடிவயிற்றை மசாஜ் செய்து வந்தால், அடிக்கடி சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்கலாம்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவில் உள்ள அல்கலைன். சிறுநீரின் pH அளவை சீராக பராமரித்து, அடிக்கடி சிறுநீர் வருவதைத் தடுக்கும். அதற்கு பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, அந்த நீரை குடிக்க வேண்டும்.

வேக வைத்த பசலைக்கீரை

உங்களுக்கு அடிக்கடி சிறுநீர் வருவது போல் உணர்ந்தால், அதிலும் இரவில் படுக்கும் போது வந்தால், கடுப்பாக இருக்கும். ஆனால் இரவில் படுக்கும் முன் பசலைக்கீரையை வேக வைத்து சாப்பிட்டு வந்தால், அவை சிறுநீர் அடிக்கடி வருவதைத் தடுக்கும்.

போதிய அளவு தண்ணீர்

முக்கியமாக தினமும் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும். இதனால் உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சிறுநீரகம் சீராக செயல்பட ஆரம்பித்து, அடிக்கடி சிறுநீர் வருவதைத் தடுங்கும். அதிலும் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம்.

Related posts

பிரசவ வலி இல்லாமல் 15 நிமிடத்தில் குழந்தை பிறக்க ..!

nathan

எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய் !!

nathan

சர்க்கரை நோயால் உங்கள் இல்லற வாழ்க்கை சாத்தியமாகுமா?

nathan

புற்று நோய் எதிர்ப்பு சக்தி – மங்குஸ்தான் பழம்

nathan

நோய் வருவதற்கு முன்பே அதை அறிவிக்கும் ஒரு கருவிதான் இது…..

sangika

இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க… அதிக பெண்களுக்கு ஏன் நெஞ்சுவலி வருதுன்னு தெரியுமா?

nathan

சளியை எளிதாக வெளியேற்றனுமா? மருத்துவர் கூறும் தகவல்கள்…

nathan

செவ்வாழை பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்..!

nathan