31.2 C
Chennai
Tuesday, Nov 5, 2024
cz0JnyC
சிற்றுண்டி வகைகள்

மைக்ரோவேவ் அவன் சமையல் பாதுகாப்பானதா?

இன்றைய பரபர வாழ்க்கை சூழலில் பொறுமையாக சமைப்பதற்குக் கூட பலருக்கு நேரம் இல்லை. அதனாலேயே, சமையலறையை பிரெட் டோஸ்டர், டீப் ஃப்ரையர், ஃபுட் ஸ்டீமர், மைக்ரோவேவ் அவன் என விதவிதமான சமையல் கருவிகள் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன. எப்போ பார்த்தாலும் கிச்சன்லயே இருக்க வேண்டியதா இருக்கே’ என்று சலித்துக் கொண்டவர்களுக்கு, இந்தக் கருவிகள் பெரும் உதவியாக அமைந்துவிட்டன.

ஆனால் -இவற்றில் சமைக்கப்படும் உணவுகள் ஆரோக்கியமானதா? இந்த வினாவை நாம் எழுப்புவதே இல்லை. அடுப்பு, கேஸ் என வழக்கமாக நாம் சமைக்கும் முறைகளில், முதலில் பாத்திரம் சூடாகும். பிறகு ‘வெப்பக் கடத்தல்’ முறையில் உணவுப் பொருட்கள் சூடாகும். மைக்ரோவேவ் அவனில் நடக்கக் கூடிய செயல் முறையானது முற்றிலும் மாறானது. இதில், மின்சாரத்தின் மூலம் சக்தி வாய்ந்த மைக்ரோ அலைகள் உருவாகின்றன. இந்த நுண் அலைகள் மைக்ரோவேவ் அவனில் வைக்கப்பட்ட பாத்திரத்தில் உள்ள உணவுப் பொருட்களின் நீர் மூலக்கூறுகளை அசைத்து, அவற்றில் அதிர்வை ஏற்படுத்துகின்றன.

இப்படி ஏற்படும் அதிர்வினால் மூலக்கூறுகளில் உராய்வு ஏற்பட்டு, வெப்பம் உண்டாகிறது. இந்த வெப்பம், உணவின் அனைத்துப் பாகங்களிலும் ஒரே நேரத்தில் சென்றடையும் என்பதால், உணவுப் பொருள் விரைவில் வெப்பமடைந்து சமைக்கப்படுகிறது. இந்த முறையில் சமைக்கும்போது உணவில் உள்ள ஊட்டச்சத்துகள் அழிக்கப்படுகின்றன. திரும்பத் திரும்ப உணவைச் சூடாக்குவதன் மூலம், அதில் உள்ள அனைத்து ஊட்டச்சத்து களும் அழிந்து, உணவுப் பொருள் நஞ்சாகிறது.

மைக்ரோவேவ் அவனில் சமைக்கப்பட்ட உணவை உட்கொள்வதால், பல உடல் நலக்கேடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. தொடர்ந்து மைக்ரோவேவ் அவனில் சமைத்த உணவை உட்கொள்பவர்களுக்கு ரத்த அழுத்தப் பாதிப்பு, இதயத் துடிப்பு குறைதல், ரத்தத்தில் ஹீமோ குளோபின் குறைதல், உடலுக்கு நன்மை விளைவிக்கும் ஹெச்.டி.எல் கொழுப்பு குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

அத்துடன், ரத்த வெள்ளை அணுக்களில் இருக்கக்கூடிய லிம்போஸைட் குறைந்து, நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. மைக்ரோவேவ் அவனில் சமைக்கப்பட்ட உணவைத் தொடர்ச்சியாகச் சாப்பிடும்போது, மூளை செல்கள் சிதையவும் இனப்பெருக்க ஹார்மோன்களின் சுரப்புக் குறைந்து, குழந்தைப்பேறு தாமதமாகவும் வாய்ப்புகள் உள்ளன என்கிறார்கள். வேண்டுமானால் உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது டாக்டராக பணிபுரியும் நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள். விலாவாரியாக விளக்குவார்கள்.cz0JnyC

Related posts

சூப்பரான மக்ரோனி ரெசிபி

nathan

இனிப்பு பொங்கல் எப்படி செய்வது? இதோ….

nathan

காய்கறி பரோத்தா (சில்லி பரோட்டா)

nathan

சூப்பரான கறிவேப்பிலை இட்லி பொடி

nathan

சத்து நிறைந்த தினை காய்கறி கிச்சடி

nathan

சுகர்ஃப்ரீ ஓட்ஸ்  – பேரீச்சம் பழ லட்டு

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் ரைஸ் வெஜ் பால்ஸ்

nathan

குழந்தைகளுக்கு சத்துநிறைந்த ராகி கொழுக்கட்டை

nathan

மனோஹரம்

nathan