சிற்றுண்டி வகைகள்

குழந்தைகளுக்கு விருப்பமான ஆலு சீஸ் கட்லெட்

குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு, சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கு, சீஸ் வைத்து சூப்பரான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு விருப்பமான ஆலு சீஸ் கட்லெட்
தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு – கால் கிலோ
பிரெட் ஸ்லைஸ்கள் – 4,
பச்சை மிளகாய் – இஞ்சி அரைத்த விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்,
பிரெட் தூள் – சிறிதளவு,
சாட் மசாலா – அரை ஸ்பூன்
கரம் மசாலா – கால் ஸ்பூன்
மைதா மாவு – அரை கப்,
சீஸ் துருவல் – கால் கப்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்.

* மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, நீரில் நனைத்து பிழிந்தெடுத்த பிரெட் ஸ்லைஸ்கள், சாட் மசாலா, கரம் மசாலா, பச்சை மிளகாய் – இஞ்சி விழுது, சீஸ் துருவல், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டிக் கொள்ளவும்.

* தட்டிய கட்லெட்களை மைதா கரைசலில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரெட் தூளில் பிரட்டி வைத்தத கட்லெட்டுகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

* டொமெட்டோ சாஸுடன் பரிமாறவும்.201701311040429868 Aloo cheese cutlet SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button