30.5 C
Chennai
Sunday, Jul 12, 2026
இனிப்பு வகைகள்

இனிப்பான கேரட் பாதாம் கீர் செய்வது எப்படி

தேவையான பொருள்கள் :

பால் – 3 கப்
சர்க்கரை – முக்கால் கப்
கேரட் – 3
பாதாம் பவுடர் – 2 மேசைக்கரண்டி
குங்குமப்பூ – 2 இதழ்
பாதாம், முந்திரி – சிறிதளவு

செய்முறை :

* கேரட்டை சிறிய துண்டுகளாக நறுக்கி, குக்கரில் வேகவைத்து ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

* பாதாம், முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பாலைக் காய்ச்சி வைக்கவும்.

* காய்ச்சிய பாலில் ஒரு கப் பாலை எடுத்து பாதாம் பவுடர் சேர்த்து கட்டிகளில்லாமல் கரைத்து வைக்கவும்.

* மீதமுள்ள காய்ச்சிய பாலில் அரைத்து வைத்துள்ள கேரட் விழுதைச் சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து மிதமான தீயில் அடிபிடிக்காமல் கொதிக்க வைக்கவும்.

* அதனுடன் சர்க்கரையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து கலக்கவும்.

* பிறகு பாதாம் பவுடர் சேர்த்து கரைத்து வைத்திருக்கும் பாலைச் சிறிது சிறிதாக ஊற்றி கலந்து, வேறு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்

* சுவையான கேரட் பாதாம் கீர் தயார்.

* பாதாம், முந்திரி, குங்குமப் பூவை தூவி சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறலாம்.

* கேரட்டிற்கு பதிலாக பீட்ரூட், டிரை ஃப்ரூட்ஸ், பேரீச்சம்பழம் என்று எதில் வேண்டுமானாலும் செய்யலாம்.

Related posts

கேரட் அல்வா…!

nathan

கோதுமை ரவா கேசரி

nathan

தீபாவளி இனிப்பு ஸக்கார் பரே – செய்முறை !

nathan

நவராத்திரி துர்கா பூஜா ஸ்பெஷல் : அன்னாசிப்பழ அல்வா!

nathan

சுவையான தீபாவளி ஸ்பெஷல் லட்டு செய்ய…!!

nathan

தித்திப்பான எள்ளு உருண்டை செய்வது எப்படி

nathan

கோதுமை அல்வா

nathan

குலோப் ஜாமூன் .

nathan

முப்பால் கருப்பட்டி அல்வா

nathan