இனிப்பு வகைகள்

தீபாவளி ஸ்பெஷல் இனிப்பான கோதுமை அல்வா

கோதுமை மாவில் செய்யக்கூடிய இந்த அல்வாவை பொதுவாக நாம் கடையில் மட்டுமே வாங்கி சாப்பிடுவோம். இதை வீட்டில் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

தீபாவளி ஸ்பெஷல் இனிப்பான கோதுமை அல்வா
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 250 கிராம்,
சர்க்கரை – 500 கிராம்,
நெய் – 10 கிராம்,
முந்திரி – 100 கிராம்,
ஏலக்காய் தூள் மற்றும் கேசரி கலர்.

செய்முறை :

* கோதுமை மாவை தண்ணீரில் நன்கு கரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

* முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அடி கனமான வாணலியில் கோதுமை கரைசலை கொட்டி நன்கு கிளற வேண்டும்.

* மாவு கெட்டியாகும் போது சர்க்கரை கேசரி பவுடர் சேர்த்து கைவிடாமல் கிளற வேண்டும்.

* சர்க்கரை கரைந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக நெய்யை விட்டு அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

* ஓரங்களில் நெய் பிரிந்து அல்வா சுருண்டு ஒட்டாமல் வரும் வரையில் கிளற வேண்டும்.

* அல்வா கெட்டியானதும் ஏலக்காய் பொடி, முந்திரி சேர்த்து மேலும் கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறிய பின் துண்டு போட்டு பரிமாறவும்.

* சுவையான கோதுமை அல்வா ரெடி.201610260805552128 Diwali Special wheat halwa SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button