வால்நட் எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து இதயநோய்களை தடுக்கிறது.
வால்நட்டின் இலை மற்றும் பட்டை வயிற்றுப்பூச்சிகளுக்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டவை.
இவை தோல்நோய்கள், பால்வினை நோய்கள், காசநோய் ஆகியவற்றிற்கு மருந்தாகிறது.
நினைவுத்திறனை அதிகப்படுத்த உதவும் ஒமேகா 3 வால்நட்டில் அதிகமுள்ளது.
வால்நட்டில் உள்ள புரதச்சத்து அல்சீமர் நோயைக்கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.
உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட்டுக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
முந்திரி, பாதாம் உள்ளிட்ட சுமார் 7 வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் போது அக்ரூட்டில்தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் அதிகமாக இருப்பதுதான் இதற்கு காரணம்.
இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இது நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளித்து ஆரோக்கியத்துக்கு வகை செய்யும்.
வால்நட் தினமும் சாப்பிடுவதன் மூலம் ஆண்களுக்கு ஆண்மை பெருகும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது