27.1 C
Chennai
Saturday, May 24, 2025
2 1 tomato ketchpu pasta 1669638286
சமையல் குறிப்புகள்

தக்காளி கெட்சப் பாஸ்தா!

தேவையான பொருட்கள்:

* பாஸ்தா – 1 கப்

* ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்

* பூண்டு – 3 பல் (பொடியாக நறுக்கியது)

* தக்காளி கெட்சப் – 1/4 கப்

* ஆரிகனோ – 1 டீஸ்பூன்

* சில்லி ப்ளேக்ஸ் – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* சர்க்கரை – 1 டீஸ்பூன்

* பால் – 1/2 கப்

* சோள மாவு – 1 டீஸ்பூன்

2 1 tomato ketchpu pasta 1669638286

செய்முறை:

* முதலில் பாஸ்தாவை கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது உப்பு சேர்த்து, 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரால் ஒருமுறை அலசி, நீரை முற்றிலும் வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

Tomato Ketchup Pasta Recipe In Tamil
* பின்பு அதில் கெட்சப் சேர்த்து கிளற வேண்டும்.

* பின் அதில் ஆரிகனோ, சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து நன்கு கிளறி, சிறிது நீரை ஊற்றி கிளறி விட வேண்டும்.

* பிறகு சோள மாவை பால் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை வாணலியில் ஊற்றி கெட்டியாகும் வரை கிளற வேண்டும்.

* பின்பு அதில் வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து நன்கு கிளறி, 3 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான தக்காளி கெட்சப் பாஸ்தா தயார்.

Related posts

இட்லி சாப்பிட்டு போரடிக்குதா? இப்படி செஞ்சு சாப்பிடுங்க

nathan

ஆஹா பிரமாதம்! மொறு மொறு பிஷ் ஃபிங்கர்ஸ்…

nathan

சில்லி மஸ்ரூம்

nathan

கெட்டுப்போன பாலை வீசிடாதீங்க…! சுவையான கேக் செய்யலாம்…

nathan

மட்டன் கொத்துக்கறி ரெசிபி

nathan

ஆஹா பிரமாதம்! செட்டிநாடு கத்திரிக்காய் சாப்ஸ்

nathan

சுவையான இறால் முட்டை பொடிமாஸ் செய்து சாப்பிடுங்க

nathan

சுவையான மலபார் அவியல்

nathan

சுவையான கேரளா ஸ்டைல் பருப்பு குழம்பு

nathan