27.1 C
Chennai
Saturday, May 24, 2025
bread chilli 1626424691
சமையல் குறிப்புகள்

சுவையான சில்லி பிரட்

தேவையான பொருட்கள்:

* பிரட் – 4 துண்டுகள்

* ஸ்பிரிங் ஆனியன் – 1 டேபிள் ஸ்பூன்

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

சாஸ் செய்வதற்கு…

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* பூண்டு – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* வெங்காயம் – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

* குடைமிளகாய் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)

* வரமிளகாய் விழுது – 1 டேபிள் ஸ்பூன் (2-3 வரமிளகாயை சுடுநீரில் ஊற வைத்து, நீர் சேர்த்து நன்கு விழுது போல் அரைத்துக் கொள்ளவும்)

* தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்

* சோயா சாஸ் – 1/2 டீஸ்பூன்

* வினிகர் அல்லது எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

* தண்ணீர் – 1/4 கப்

* உப்பு – சுவைக்கேற்பbread chilli 1626424691

செய்முறை:

* முதலில் பிரட் துண்டுகளை எடுத்து சிறு சதுரத் துண்டுகளாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபின் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதே வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* பிறகு அதில் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ் மற்றும் வரமிளகாய் விழுது சேர்த்து சிறிது நீர் ஊற்றி நன்கு 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் அதில் பிரட் துண்டுகுளை சேர்த்து நன்கு கிளறி, மேலே ஸ்பிரிங் ஆனியனைத் தூவி பிரட்டி இறக்கினால், சுவையான சில்லி பிரட் தயார்.

Related posts

தக்காளி குழம்பு

nathan

நோய்களை அண்டாமல் தடுக்கும் வேர்க்கடலை சாதம் தயார் செய்வது எப்படி?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

லெமன் பெப்பர் சிக்கன்

nathan

சுவையான அரிசி மாவு தேங்காய் ரொட்டி

nathan

சமையலறை சாமர்த்தியத் துணுக்குகள்

nathan

பெண் பிள்ளைகளுக்கு சமையல் கற்றுக் கொடுங்கள்

nathan

சுவையான பீர்க்கங்காய் சாம்பார்

nathan

சுவையான ஆரோக்கியத்தைத் தரும் ராகி தோசை

nathan

டிப்ஸ்… டிப்ஸ்…டிப்ஸ்… டிப்ஸ்…!

nathan