beans egg poriyal
சமையல் குறிப்புகள்

சுவையான செட்டிநாடு ஸ்டைல் பீன்ஸ் முட்டை பொரியல்

தேவையான பொருட்கள்:

* முட்டை – 6

* பீன்ஸ் – 1 கப் (பொடியாக நறுக்கியது)

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* சீரக விதைகள் – 1 டீஸ்பூன்

* மிளகு – 1 டீஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* பின்பு அதில் பீன்ஸ் சேர்த்து, ஒரு சிட்டிகை உப்பு தூவி நன்கு வேகும் வரை வதக்கவும். அதற்குள் மிளு மற்றும் சீரகத்தை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.

* பிறகு அரைத்த பொடியை சேர்த்து நன்கு ஒரு நிமிடம் வதக்கவும்.

* அடுத்து, அதில் முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றி, தேவையான அளவு உப்பு தூவி குறைவான தீயில் வைத்து நன்கு கிளறி விடவும்.

* முட்டை நன்கு வெந்ததும், அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால், செட்டிநாடு ஸ்டைல் பீன்ஸ் முட்டை பொரியல் தயார்.

Related posts

சுவையான கேரட் பஜ்ஜி

nathan

புதினா தொக்கு

nathan

சுவையான இரும்புச் சத்து, நார்ச்சத்து நிறைந்த தேங்காய் பால் ரசம்

nathan

சூப்பரான உருளைக்கிழங்கு டோஃபி!…

sangika

தேங்காய் ஏலக்காய் முறுக்கு

sangika

வீட்டிலேயே செய்யலாம் மலபார் பரோட்டா

nathan

coconut milk benefits in tamil – தேங்காய் பால் நன்மைகள்

nathan

வித்தியாசமான பூண்டு ரொட்டி

nathan

ஆரோக்கியமான ஜீரண இடியாப்பம்!

sangika