சமையல் குறிப்புகள்

சுவையான பன்னீர் சீஸ் சாண்ட்விச்

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் – 1 டீஸ்பூன் + தேவையான அளவு

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1 டீஸ்பூன்

* தக்காளி கெட்சப் – 3 டேபிள் ஸ்பூன்

* பன்னீர் – 1 கப் (துருவியது)

* உப்பு – சுவைக்கேற்ப

* துருவிய சீஸ் – தேவையான அளவு

* பிரட் துண்டுகள் – தேவையான அளவு[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பாதி வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

* பின்னர் அதில் உப்பு மற்றும் மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பின்பு அதில் கெட்சப் சேர்த்து கிளற வேண்டும்.

* அடுத்து அதில் பன்னீரை சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.

* பிறகு ஒரு பிரட் துண்டை எடுத்து, அதில் வதக்கிய பன்னீரைப் பரப்பி, அதன் மேலே சிறிது வெங்காயத்தைத் தூவி, அதன் மேல் துருவிய சீஸைத் தூவ வேண்டும்.

* அதன்பின் மேலே மற்றொரு பிரட் துண்டை வைக்க வேண்டும்.

* பின்பு ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பிரட் துண்டுகளை முன்னும் பின்னும் பொன்னிறமாக டோஸ்ட் செய்து எடுத்து, இரண்டு துண்டுகளாக வெட்டினால், சுவையான சீஸ் பன்னீர் சாண்ட்விச் தயார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button