28.6 C
Chennai
Saturday, May 18, 2024
25 lemon idiyappam
சமையல் குறிப்புகள்

சுவையான எலுமிச்சை இடியாப்பம்

அனைவரும் எலுமிச்சை சாதம் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் எலுமிச்சை இடியாப்பம் பற்றி கேள்விப்பட்டதுண்டா? ஆம், எலுமிச்சை இடியாப்பம் செய்வது மிகவும் ஈஸி. இதுவும் எலுமிச்சை சாதம் போன்று தான். ஆனால் மிகவும் சுவையாக இருக்கும். மேலும் இது மிகவும் சிறந்த ஒரு காலை உணவும் கூட.

இங்கு அந்த எலுமிச்சை இடியாப்பத்தை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து முயற்சித்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

சேமியா/இடியாப்பம் – 1 1/2 கப்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

கடுகு – 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
வேர்க்கடலை – 1/2 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் – 1
கெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் சேமியா/இடியாப்பத்தை செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்க வேண்டும்.

பிறகு அதில் இடியாப்பம் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, பின் அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, மஞ்சள் தூள் தூவி நன்கு கிளறி இறக்கினால், எலுமிச்சை இடியாப்பம் ரெடி!!!

Related posts

வெண்டைக்காய் முந்திரி பொரியல் செய்வது எப்படி?

nathan

காலிஃப்ளவர் குருமா!

nathan

இஞ்சி குழம்பு

nathan

கத்திரிக்காய் மசாலா குழம்பு

nathan

செட்டிநாடு மசாலா சீயம்

nathan

சுவையான காலிஃப்ளவர் மசாலா தோசை

nathan

ரேஷன் அரிசியில் மொறு மொறுப்பான தோசை

nathan

சுவையான காளான் மஞ்சூரியன்

nathan

சமையலறை சாமர்த்தியத் துணுக்குகள்

nathan