33.4 C
Chennai
Saturday, Jul 5, 2025
1 mushroompepperfry 1652536288
சமையல் குறிப்புகள்

காளான் பெப்பர் ப்ரை

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு..

* மிளகு – 1 டேபிள் ஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

* சோம்பு – 1/2 டீஸ்பூன்

காளான் ரோஸ்ட்டிற்கு…

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1/4 டீஸ்பூன்

* இஞ்சி – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* பூண்டு – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* வெங்காயம் – 3

* காளான் – 250 கிராம்

* குடைமிளகாய் – 1

* தண்ணீர் – 1/4 கப்

* உப்பு – சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு…

* நெய் – 1 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1/4 டீஸ்பூன்

* பச்சை மிளகாய் – 2

* வரமிளகாய் – 2

* கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் மிளகு, சீரகம் மற்றும் சோம்பு ஆகியவற்றை போட்டு நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து இஞ்சி, பூண்டு சேர்த்து சிறிது வதக்க வேண்டும்.

* பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

Mushroom Pepper Fry Recipe In Tamil
* பிறகு அதில் காளானை சேர்த்து நன்கு கிளறி, குடைமிளகாயை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அரைத்த பொடி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது நீர் சேர்த்து நன்கு கிளறி, மிதமான தீயில் 10 நிமிடம் ரோஸ்ட் செய்ய வேண்டும்.

* இறுதியாக மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் நெய் சேர்த்து உருகியதும், கடுகு, பச்சை மிளகாய், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து காளானில் ஊற்றி கிளறி இறக்கினால், காளான் பெப்பர் ப்ரை தயார்.

Related posts

சுவையான ஆந்திரா ஸ்டைல் தக்காளி ரசம்

nathan

மட்டன் சிக்கன் மசாலா பவுடர்

nathan

முந்திரி சிக்கன்

nathan

இஞ்சி குழம்பு

nathan

சுவையான பீட்ரூட் மசாலா தோசை

nathan

சூப்பரான உருளைக்கிழங்கு டோஃபி!…

sangika

சுவையான உருளைக்கிழங்கு பீன்ஸ் சப்ஜி

nathan

சுவையான மஸ்ரூம் பாஸ்தா

nathan

தயிர் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?

nathan